கனமழையால் தத்தளிக்கும் பாக்., வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. 48 மணி நேரத்தில் 307 பேர் பலி..
பாகிஸ்தானில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
பாகிஸ்தானோட வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் கடந்த சில நாட்களா பெய்யுற கனமழையால வெள்ளமும், மேகவெடிப்பும் ஏற்பட்டு, இதுவரை 307 பேர் உயிரிழந்திருக்காங்கன்னு மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் (PDMA) தெரிவிச்சிருக்கு. ஆகஸ்ட் 21 வரை இந்த கனமழை தொடரும்னு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கு.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்கு. மேகவெடிப்பு, வெள்ளம், நிலச்சரிவு, மின்னல் தாக்குதல், வீடுகள் இடிஞ்சு விழுந்ததுன்னு பல காரணங்களால இந்த பேரழிவு ஏற்பட்டிருக்கு. இதுல 279 ஆண்கள், 15 பெண்கள், 13 குழந்தைகள் உயிரிழந்திருக்காங்க. 23 பேர் காயமடைஞ்சிருக்காங்க, இதுல 17 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவாங்க.
புனர் மாவட்டம் இந்த வெள்ளத்துல மிக மோசமா பாதிக்கப்பட்டிருக்கு. இங்க 184 பேர் பலியாகியிருக்காங்க. ஷங்லாவில் 36 பேர், மன்சேராவில் 23 பேர், ஸ்வாட்டில் 22 பேர், பஜாயுரில் 21 பேர், பட்டாக்ராமில் 15 பேர், லோயர் திரில் 5 பேர், அப்போட அப்போடாபாத்தில் ஒரு குழந்தைன்னு உயிரிழப்பு பதிவாகியிருக்கு. இந்த மாவட்டங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் காரணமா 74 வீடுகள் முழுமையா இடிஞ்சு சேதமாகியிருக்கு, இதுல 63 வீடுகள் பகுதியா சேதமடைஞ்சு, 11 வீடுகள் முழுசா அழிஞ்சு போயிருக்கு.
இதையும் படிங்க: அமெரிக்கா - பாக்., நெருக்கம் நீடிக்காது!! சீக்கிரமே புட்டுக்கும்!! அடித்துச் சொல்லும் இந்திய முன்னாள் தூதர்..
புனர் மாவட்டத்துல உள்ள கிராமங்கள் முழுக்க முழுக்க அழிஞ்சு, கற்குவியல்களா மாறியிருக்கு. ஒரு மலைப்பகுதி கிராமத்துல, “இங்க இருந்தது ஒரு உயிரோட்டமான கிராமம், இப்போ பெரிய பாறைகளும், இடிபாடுகளுமா மாறிடுச்சு”னு மீட்பு பணி அதிகாரி ஒருவர் சொல்லியிருக்கார். பஜாயுர் மாவட்டத்துல, ஒரு 42 வயசு நபர், மின்னல் தாக்குதலால தன்னோட வீடு இடிஞ்சு, மனைவியும், 5 குழந்தைகளும் இறந்ததை பகிர்ந்திருக்கார். “எல்லாமே அழிஞ்சு, குவியலா மாறிடுச்சு”னு அவர் வேதனையோட சொல்லியிருக்கார்.
மீட்பு பணிகள் முழு வீச்சுல நடந்துட்டு இருக்கு. 2,000-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள், புனர், ஸ்வாட், பஜாயுர், மன்சேரா, ஷங்லா, பட்டாக்ராம் மாவட்டங்களில் பணியாற்றுறாங்க. ஆனா, நிலச்சரிவு, சாலைகள் மூடப்பட்டது, கனமழைன்னு மீட்பு பணிகளுக்கு பெரிய சவால்கள் இருக்கு. மன்சேராவில் 1,300 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டிருக்காங்க. ஆனா, இன்னும் பலர் காணாம போயிருக்காங்கன்னு உள்ளூர் அதிகாரிகள் சொல்றாங்க.
வெள்ளத்துல மாட்டிக்கிட்டவங்களுக்கு உதவ, பாகிஸ்தான் ராணுவம் ஒரு நாள் சம்பளத்தையும், 600 டன் உணவு பொருட்களையும் நன்கொடையா கொடுத்திருக்கு. ஆனா, ஆகஸ்ட் 15-ல் மீட்பு பணிக்கு சென்ற ஒரு ராணுவ ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமா விபத்துல சிக்கி, 5 பேர் இறந்திருக்காங்க. இதனால, கைபர் பக்துன்க்வாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, மாகாண கொடி அரைக்கம்பத்துல பறக்க விடப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், வெள்ள பாதிப்பை மதிப்பிட ஒரு அவசர கூட்டத்தை நடத்தி, மீட்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு போட்டிருக்கார். 911 அவசர உதவி எண்ணை நாடு முழுக்க செயல்படுத்தியிருக்காங்க. ஆனா, மழை இன்னும் தொடர்ந்து பெய்யுறதால, பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம்னு பயம் இருக்கு.
இதையும் படிங்க: பாகிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை.. உயரும் பலி எண்ணிக்கை.. தொடரும் மீட்புப்பணி..!!