×
 

அடங்காத பாகிஸ்தான்..! சுக்கு நூறாக்கிய இந்தியா.. திக் திக் நிமிடங்கள்.. விக்ரம் மிஸ்ரி விளக்கம்..!

பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை நிறுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்தது. அப்போது பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைகளில் அதிக அளவில் தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட ட்ரோன்கள் ஆயுதமின்றி கேமராக்களுடன் வந்தன. பாகிஸ்தான் ஏவியன் ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. பாகிஸ்தான் ட்ரோன் பாகங்களை கைப்பற்றி தடையவியல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எல்லைப் பகுதியில் 36 இடங்களில் சுமார் 400 ட்ரோன்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இரவு நேரத்தில் இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தியாவின் பதிலடி தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் போர் நிறுத்தம் மீறல் தொடர்கிறது. பயணிகள் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் கேடயமாக பயன்படுத்துகிறது. பத்திண்டா ராணுவ நிலையத்தை பாகிஸ்தான் தாக்கும் முயற்சி கண்டறியப்பட்டு அது முறியடிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கண்குத்தி பாம்பாக கண்காணிக்கும் போலீஸ்..! மால்களுக்கு பலத்த பாதுகாப்பு..!

இதனை அடுத்து வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசினார். அவர் பேசியதவது, போர் பதற்றம் ஏற்பட்ட பிறகும் பாகிஸ்தானில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படவில்லை. பொதுமக்களின் குடியிருப்புகள் உடைமைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ நிலைகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தியது. பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். மத வழிபாட்டுத்தலங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

உலக நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்த முயல்கிறது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நேற்று இரவு தீவிர தாக்குதல்களை தொடர்ந்தது. பூஞ்சில் உள்ள குருத்வாராவை தாக்கியது பாகிஸ்தான் தான்., ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் பழி போடுகிறது. பாகிஸ்தானின் தாக்குதல் திட்டம் ஒருபோதும் இந்தியாவிடம் பலிக்காது. கர்த்தாபூர் வான் வழித்தடம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

குருத்துவாரா, சர்ச்சுகள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளது. ஐ.எம்.எஃப் கூட்டத்தில் பாகிஸ்தான் குறித்த தங்களின் கருத்துக்களை எடுத்துரைப்போம். பாகிஸ்தானுக்கு செல்லும் நிதி உதவிகளை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. உலக நாடுகளிடம் கடன் கேட்கும் பாகிஸ்தான் குறித்து ஐ.எம்.எஃப் கூட்டத்தில் எங்கள் கருத்துக்களை தெரிவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: அவசரக்கான நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள்..! தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த கடிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share