×
 

கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வச்சோம்!! உமரு அப்பிடிபட்டவரு இல்ல!! கண்ணீர் விடும் குடும்பம்!

கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து முகமது உமரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உமரின் தந்தை குலாம் நபியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தலைநகர் டெல்லியின் செங்கோட்டை அருகே நவம்பர் 10 அன்று மாலை 6:52 மணிக்கு நடந்த சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் சார்ந்த ஜெய்ஷ்-இ-மொஹமது (ஜெஎம்) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய டாக்டர் முகமது உமர் தான் அந்த ஹியுண்டாய் i20 காரை ஓட்டி வந்தவர் என்றும், அவர் தானே வெடிப்பைத் தூண்டியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

சம்பவ இடத்தில் சிதறி கிடந்த உடல் பாகங்களில் உமருடையவையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதை உறுதிப்படுத்த, அவரது பெற்றோரின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய விசாரணை அமைப்பு (என்.ஐ.ஏ.) தலைமையில் நடக்கும் விசாரணையில், உமரின் குடும்பத்தினரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடிய தாக்குதலுக்கு பிறகு, போலீஸார் முகமது உமரின் தந்தை குலாம் நபியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த உமரின் மைத்துனி முசமிலா அக்தர் (Muzamila Akhtar) இது குறித்து கூறுகையில், "இந்த சம்பவத்தில் உமர் சம்பந்தப்பட்டிருப்பதாக வந்த செய்தியை அறிந்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். 

இதையும் படிங்க: கார் குண்டுவெடிப்பு பயங்கரம்... அதிர வைக்கும் நிகழ்வு... கதி கலங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!

அவர் அப்படிப்பட்டவரல்ல. கடந்த 2 ஆண்டுகளாக ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் தான் வசித்து வந்தார். நாங்கள் கடைசியாக 3 நாட்களுக்கு முன்பு அவரிடம் பேசினோம். தேர்வுகள் நெருங்குவதால் அதில் மும்முரமாக இருப்பதாகவும், 3 நாட்கள் கழித்து வருவதாகவும் கூறினார்" என்றார். 

வறுமை நிலையில் குடும்பத்தினர் கஷ்டப்பட்டு உமரை டாக்டராகப் படிக்க வைத்ததாகவும், அவர் எப்போதும் படித்துக்கொண்டேதான் இருப்பார். அவர் தான் இந்தக் குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்தார் என்றும் முசமிலா தெரிவித்தார்.

முகமது உமர், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 32 வயது டாக்டர். அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றினார். அவருடன் அதே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் அடில் அகமது ராதர் (Adeel Ahmad Rather), டாக்டர் முஜாம்மில் ஷகீல் (Mujammil Shakeel) ஆகியோர், 2,900 கிலோ அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். 

இவர்களுடன் தொடர்புடைய முகமது உமர் மட்டும் தலைமறைவானார். கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில போலீஸாரின் கூட்டு நடவடிக்கையில் 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுடனும் உமர் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஜெஎம் பயங்கரவாத இயக்கத்தின் 'ஸ்லீப்பர் செல்கள்' (தூங்கும் செல்கள்) ஆக இருந்துள்ளனர்.

தங்கள் ஆட்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தாமும் கைடு செய்யப்படலாம் என்ற பயத்தில், தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, முகமது உமர் காரை ஓட்டி சென்று வெடிப்பைத் தூண்டி தாக்குதல் நடத்தியதாக போலீஸார் கூறுகின்றனர். இது 'ஃபிடாயீன்' (தற்கொலை) ஸ்டைல் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

உமர், ஃபரிதாபாத்தின் அல்-ஃபலாஹ் (Al-Falah) பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாட்டாளராக பணியாற்றினார். அவரது சக டாக்டர்கள் உடனும் தொடர்புடையவர்கள். சமூக ஊடகங்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஜெஎம்-ன் பெண்கள் பிரிவான 'ஜமாத் உல் முமினாத்' உருவாக்கத்திலும் உமர் ஈடுபட்டிருக்கலாம்.

இந்த விசாரணை, பயங்கரவாத அமைப்புகள் படித்தவர்களை 'ஒயிட் காலர்' பயங்கரவாதிகளாக மூளைச்சலவை செய்யும் புதிய உத்தியை வெளிப்படுத்தியுள்ளது. உமரின் குடும்பம் இன்னும் இதை ஏற்க மறுக்கிறது. போலீஸ், லக்னாவில் உள்ள உமரின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த சதியை முழுமையாக முறியடிப்போம்" என்று உறுதியளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போதும் விசாரணையை கண்காணித்து வருகிறார். இந்த தாக்குதல், தேசிய பாதுகாப்புக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த சதி? நாங்கதான் செஞ்சோம்... பரபரப்பு வாக்குமூலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share