கோழைத்தனமான தாக்குதல்!! இந்தியா திரும்பியதும் ஆக்சனில் இறங்கிய மோடி!! அமைச்சரவையில் கர்ஜனை!!
டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அது பயங்கரவாத தாக்குதல் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி, நவம்பர் 13: தலைநகர் டெல்லியின் செங்கோட்டை அருகே நவம்பர் 10 ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 12 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பூடான் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர், “இந்த கோர சம்பவத்துக்கு காரணமான சதிகாரர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது” என்று உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில் அவசர மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூருக்கு பழிதீர்க்க துடிக்கும் பயங்கரவாதிகள்!! டெல்லி மட்டுமே டார்கெட் இல்ல!! அதிர்ச்சி ரிப்போர்ட்!
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு மத்திய அமைச்சரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்” என்றார்.
மேலும் அவர், “பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் மத்திய அரசு அதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள குற்றவாளிகள், அவருக்கு உதவியவர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று உறுதிபடக் கூறினார்.
விசாரணை மிகவும் அவசரமாகவும் தொழில்முறை ரீதியாகவும் நடத்தப்படும் என்றும், உலக நாடுகளின் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்கு அரசு முழு உறுதியுடன் செயல்படும் என்று அமைச்சரவை மீண்டும் உறுதியளித்தது. கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: உங்களுக்கு எத்தனை WIFE..?? சிரியா அதிபரிடம் இப்படி ஒரு கேள்வியா!! குசும்புக்கார டிரம்ப்..!!