டெல்லி கார் குண்டு வெடிப்பு!! ஆட்டத்தை சூடேற்றும் அமலாக்கத்துறை! ரூ.139 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்!
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய பங்காற்றிய குற்றவாளிகள் பணியாற்றிய அல் பலாஹ் பல்கலையின் 139 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
டெல்லி: கடந்த நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்திய முக்கிய குற்றவாளிகள் ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பல்கலையின் மீது தீவிர விசாரணை தொடங்கியது.
அமலாக்கத்துறை (ED) விசாரணையில், பல்கலையின் உரிமையாளர் ஜாவேத் அஹமது சித்திக் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் (மனி லாண்டரிங்) ஈடுபட்டது உறுதியானது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்களுக்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஜாவேத் அஹமது சித்திக் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை அந்த பல்கலைக்கழகத்தின் 139 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது. இதில் பல்கலை வளாகத்தில் உள்ள 54 ஏக்கர் நிலம், கட்டடங்கள் உள்ளிட்டவை அடங்கும். முழு விசாரணையில் இதுவரை முடக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு 493.24 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அனுமதியின்றி மஞ்சுவிரட்டு…! பறிபோன உயிர்கள்..! சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்..!
அமலாக்கத்துறை ஜாவேத் அஹமது சித்திக் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்ததாகவும், பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த சம்பவம் தீவிரவாதத்திற்கு நிதி ஆதாரம் வழங்கும் நிறுவனங்கள் மீதான விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு அமைப்புகள் இத்தகைய நிறுவனங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: மது விற்பனையில் அசுர வளர்ச்சி… கஜானாவில் பொங்கிய போதை..! வெளுத்து வாங்கிய TVK அருண் ராஜ்..!