×
 

உத்தரவுக்கு காத்திருக்காதீங்க!! அமெரிக்கா அத்துமீறினா சுடுங்க! டென்மார்க் வீரர்களுக்கு பிரதமர் மெட்டே ஆர்டர்!

கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக அதிபர் டிரம்ப் மிரட்டிய சில நாட்களுக்கு பிறகு டென்​மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோபன்ஹேகன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற முயன்றால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன்லாந்து டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிரதேசமாகும். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான இடமாக இது உள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப், "கிரீன்லாந்து இப்போது ரஷ்யா மற்றும் சீன கப்பல்களால் சூழப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்: சிறையெடுத்த கப்பலில் இந்தியர்கள்..!! ரஷ்யா கடும் கண்டனம்..!!

அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய கிரீன்லாந்தை நம்முடன் இணைப்பது அவசியம்" என்று கூறினார். இந்தக் கருத்து உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடியாக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடும் தொனியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: "நேட்டோ கூட்டமைப்பின் ஒப்பந்தப்படி, ஒரு உறுப்பு நாடு மற்றொரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது.

ஏதாவது ஒரு நாட்டுக்கு ஆபத்து என்றால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். அமெரிக்கா போன்ற ஒரு நேட்டோ உறுப்பு நாடு மற்றொரு நாட்டை ராணுவ ரீதியாக தாக்க முயன்றால், நேட்டோவே பாதியில் நின்றுவிடும். இதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

வெனிசுலாவுடன் கிரீன்லாந்தை ஒப்பிட முடியாது. கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற முயன்றால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து போகும். எங்கள் ராணுவ வீரர்கள் 'முதலில் சுடு, பின்னர் கேள்வி கேள்' என்ற கொள்கையை பின்பற்றுவார்கள்.

யாராவது டென்மார்க் பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயன்றால், எங்கள் வீரர்கள் தளபதியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்" என்று மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்தார்.

டிரம்பின் இந்த கருத்து ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவின் ஆர்வம் புதிதல்ல என்றாலும், தற்போது டிரம்ப் திறந்து பேசி வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

டென்மார்க் பிரதமரின் இந்த கடும் எச்சரிக்கை நேட்டோ கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இதையும் படிங்க: பயங்கரவாதமே இல்லாத காஷ்மீர் தான் இலக்கு!! அதிகாரிகளுக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share