×
 

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது.... மத்திய அமைச்சர் கருத்துக்கு கனிமொழி பதிலடி..!

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது என்ற மத்திய அமைச்சர் கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கல்வி நிதி தொடர்பான ஒரு கடுமையான மோதல் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இந்த சர்ச்சையின் மையத்தில் உள்ளது சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டு நிதி, குறிப்பாக சுமார் 2,291 கோடி ரூபாய் தொகை விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு.சமக்ர சிக்ஷா த்ட் என்பது மத்திய அரசின் முக்கியமான கல்வித் திட்டமாகும். இது பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்காக இயங்குகிறது.

ஆசிரியர் பயிற்சி, மாணவர்களுக்கான உதவித்தொகை, உள்கட்டமைப்பு வசதிகள், சிறப்புக் கல்வி போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு நிதி வழங்குகிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய கல்வி நிதியை விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிதி நிறுத்தத்துக்கு முக்கிய காரணமாக மத்திய அரசு கூறுவது தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழகம் முழுமையாக அமல்படுத்தவில்லை என்பதாகும். குறிப்பாக, NEP-இன் மும்மொழிக் கொள்கை மற்றும் PM SHRI பள்ளிகள் திட்டத்தை ஏற்க மறுப்பதால் நிதி விடுவிக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தமிழகம் தொடர்ந்து இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருவதால், இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்றும் அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் கடன் நிலை கவலைக்கிடம்!! திமுகவை வம்பிழுக்கு காங்., நிர்வாகி! பிரவீன் சக்ரவர்த்தி!

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது என்றும் மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார் என்றும் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார். அவருக்கு கனிமொழி எம். பி. பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார். 

இதையும் படிங்க: முதல்வருக்கு ஓபன் சேலஞ்ச் கொடுத்த EPS... செய்யலாம்.., ஆனா... கனிமொழி MP பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share