×
 

தண்ணீரை நிறுத்தினால், உங்கள் மூச்சை நிறுத்துவோம்: மோடிக்கு லஷ்கர்-இ-தொய்பா பகிரங்க மிரட்டல்..!

லாகூரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பயங்கரவாதியும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் இணை நிறுவனருமான ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத் மிரட்டல் விடுத்துள்ளார்.

"நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் மோடியின் மூச்சை நிறுத்துவோம்'' என லஷ்கர்- தொய்பா பயங்கரவாதத் தலைவர்  ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். 

செனாப் நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் துண்டிக்க இந்தியா எடுத்த முடிவு தொடர்பாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மே 5, 2025 அன்று லாகூரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பயங்கரவாதியும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் இணை நிறுவனருமான ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத் மிரட்டல் விடுத்துள்ளார்.

பயங்கரவாத ஆதரவு தொடர்பாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டது. இது நதி அமைப்பை நம்பியுள்ள 80% பாகிஸ்தான் விவசாயத்தை பாதித்தது. தல்ஹா லஷ்கர் -இ- தொய்பா அமைப்பில்  நிதிகளை கையாண்டு வருகிறார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின்  பயங்கரவாதிகள் அனைவரும் இந்தியாவுக்கு பயந்து தலைமறைவாக உள்ளனர். லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவன்  ஹபீஸ் சயீத்தின் பெயரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பஞ்சாப் மாகாணத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லஷ்கர்-இ-தொய்பா தலைவன் எங்கே இருக்கிறான்..? தெனாவெட்டாக மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

லாகூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தல்ஹா, ''எனது தந்தை இந்தியாவின் கண்காணிப்பில் இருக்கிறார். இந்திய அரசு அவருக்கு எதிராக ஒவ்வொரு நாளும் தேடுதலை தொடங்கி வருகிறது. ஆனால் அவருக்கு எதுவும் நடக்காது. ஹபீஸ் சயீத் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு யாரும் தீங்கு செய்ய முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

''என் தந்தை இந்தியாவில் குறிவைக்கப்படுகிறார். அவர் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்படுகிறார். அவர் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது நடந்த தாக்குதல்களில் எனது தந்தையின் பெயர் வேண்டுமென்றே இழுக்கப்படுகிறது.

 

எனது தந்தைக்கும்,  இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்திய அரசு தவறாக சித்தரித்து அவரை அவதூறு செய்கிறது. அது நாடகம் ஆடுகிறது. எனது தந்தை நிரபராதி. எனது தந்தைக்கு எதிரான அனைத்து வழக்குகளும் பொய்யானவை. அவர் தனது வேலையை பொறுப்புடன் செய்கிறார்.

பேரணியில் கலந்து கொண்ட மக்களைத் தூண்டிவிட்டு, நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் போர் தொடங்கினால், நாங்கள் பின்வாங்க மாட்டோம். வாள்களால் சொர்க்கம் உள்ளது. வாள்களால் மட்டுமே சொர்க்கம் அடையப்படும்'' என்று தல்ஹா கூறினார். ஹபீஸ் சயீத் தனது பதவியை தல்ஹாவிடம் ஒப்படைக்கத் தயாராகி வருகிறார். தல்ஹா இரவில் தனது பேரணியை ஏற்பாடு செய்கிறார். அங்கு அவர் பாகிஸ்தான் மக்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டுகிறார்.

இதையும் படிங்க: இந்தியா-இஸ்ரேலுக்கு குறி..! லஷ்கர்-இ-தொய்பா தலைவன் மிரட்டல்..! ஆப்பு வைத்து கொள்ளும் பாக்.,!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share