×
 

#BREAKING வேகத்தை அதிகரித்த ‘டிட்வா’...!! தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து... எங்கெல்லாம் ரெட், ஆரஞ்சு அலர்ட்?

 தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னைக்கு 560 கிலோமீட்டரல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் கடலோர பகுதிகளிலும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் என்பது மையம் கொண்டிருக்கிறது. 

இது இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் வழியாக வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா பிரதேச கடற்கரைக்கு அருகே தென்கிழக்கு வங்கக்கடலை அடையும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தற்பொழுது புயலின் வேகம் என்பது நேற்றை விட அதிகரித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு வட கடலோரம் ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் மிக கனமலை முதல் அதிக கனமழைக்கான எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் புயலின் வேகம் அதிகரித்துள்ளதால் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: அடிச்சு நகர்த்தப் போகுது மழை... சென்னைக்கும் ரெட் அலர்ட்... உஷார் மக்களே...!

புயல் காரணமாக பாம்பன், நாகை, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் நான்காம் எண் புயர் எச்சரிக்கை கூண்டும், சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகளும் ஏற்றப்பட்டுள்ளன. 50 கிலோமீட்ட வேகத்தில் சுறைக்காற்று வீசக்கூடும் என்பதால் ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். 

இதன்படி இன்று தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, ராவநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், பயலபுரூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், ராகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகனமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: #BREAKING உருவாகிறது 2வது புயல்... வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னை நோக்கி வரும் ஆபத்து?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share