×
 

துணை வேந்தருக்கே பகிரங்க மிரட்டல்... விளைவு விபரீதமா இருக்கும் CM SIR..! அப்பாவு தாக்கு..!!

துணை வேந்தர்களை பகிரங்கமாக மிரட்டுவதாக அப்பாவு தெரிவித்தார்.

நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக 33-வது பட்டமளிப்பு விழாவில், முதலில் வந்தே மாதரம், தொடர்ந்து தேசிய கீதம், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும், மீறினால் துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் விவகாரத்தில் வழிகாட்டுதல் தாருங்கள் என்று பிரதமர் மோடியிடம் கெஞ்சிக் கேட்டு பெற்ற நடைமுறை இதுதானா CM Sir.? என முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார்.

2025-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் கூட்டிய போது, அன்றைய முதல்வர் முகஸ்டாலின் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரமும், அவர்களை கூட்டும் அதிகாரமும் மாநில அரசுக்குதான் உண்டு என்பதை சுட்டிக் காட்டி அந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள 32 பல்கலைக்கழக துணை வேந்தர்களையும் கலந்து கொள்ள விடாமல் செய்தவர் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!

அவர்களுக்கு இருந்த அதே வீரம், தைரியம், தில்லு, ஆவேசம், வாய் சவடால் எல்லாம் தங்களுக்கு சினிமாவில் மட்டும் தானா CM sir ? என கேட்டுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தை உலகிற்கு தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே அதனை மூன்றாம் தர வாழ்த்தாக மாற்ற முயற்சிக்கும் ஆளுநருக்கு தமிழக முதல்வர் துணை போவதாகவும், தமிழ்நாட்டில் நடப்பது த.வெ.க ஆட்சியா? அல்லது RSS ஆட்சியா ? என கேள்வி எழுப்பினார். மூன்றாவதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று நிர்பந்தித்தால் விளைவு விபரீதமாக இருக்கும் CM Sir என்றும் எச்சரித்தார். 

இதையும் படிங்க: தவெக பட்ஜெட்டை குறிவைக்கும் திமுக? விஜய் அரசை எதிர்கொள்ள மு.க.ஸ்டாலின் வகுத்த வியூகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share