×
 

கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!

கோவை மாவட்டத்தில்10 தொகுதிகளில் 3ல் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என திமுக பூத் ஏஜெண்டுகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடி (பூத்) வாரியாக பதிவான ஓட்டு விபரங்களை தி.மு.க. பூத் ஏஜன்ட்டுகள் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 3,540 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து கட்சிகளின் பூத் ஏஜன்ட்டுகளும் வாக்காளர்கள் விபரங்களை கவனமாக பதிவு செய்தனர். 

தற்போது ஒவ்வொரு பூத்திலும் எத்தனை ஓட்டுகள் பதிவாகியுள்ளன, ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு ஓட்டு சென்றிருக்கும், 2024 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில் எப்படி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.

தி.மு.க. பூத் ஏஜன்ட்டுகள் தங்கள் ஆய்வை இறுதி செய்து, மாவட்டத்தில் 10 தொகுதிகளில் மூன்றில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். கோவை மாவட்டத்தின் அனைத்து 10 தொகுதிகளும் தற்போது அ.தி.மு.க. கூட்டணியின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதை தக்கவைக்க அக்கூட்டணி முயற்சி செய்யும் நிலையில், தி.மு.க. கூட்டணி 10க்கு 10 என்ற இலக்குடன் மும்முரமாக பணியாற்றியது.

இதையும் படிங்க: அதிமுகவின் கொங்கு கோட்டையில் ஓட்டை!! காரியத்தை கச்சிதமாய் முடித்த செந்தில் பாலாஜி!!

தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “ஓட்டுச்சாவடி வாரியாக ஆய்வு செய்ததில் கோவை தெற்கு, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளில் தி.மு.க.வுக்கு வெற்றி உறுதியாக இருக்கும். கோவை வடக்கு மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதிகளில் கடைசி நேரத்தில் வெற்றி-தோல்வி மாறக்கூடும். தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளை துரத்திக் கொண்டே செல்வோம், வெற்றியை நெருங்குவோம். பொள்ளாச்சி, சிங்காநல்லூர் மற்றும் சூலூர் தொகுதிகள் இழுபறியாக இருக்கும்” என்றனர்.

இந்த தேர்தலில் த.வெ.க. ஓட்டுகளை பிரித்திருப்பதாகவும், யாருடைய ஓட்டு எந்த அளவுக்கு பிரிந்துள்ளது என்பதை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். தி.மு.க.வினர் இந்த ஆய்வின் மூலம் தங்களது பலவீனமான பகுதிகளை அடையாளம் கண்டு, அடுத்தகட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் தமிழக அரசியலில் முக்கிய இடம் வகிப்பதால், இங்கு ஏற்படும் மாற்றங்கள் முழு மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணி தற்போதைய இடங்களை தக்கவைக்க போராடும் நிலையில், தி.மு.க. கூட்டணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 

பூத் அளவிலான துல்லியமான ஆய்வு இரு தரப்புக்கும் பெரும் உதவியாக இருக்கும். வரும் நாட்களில் இந்த ஆய்வு முடிவுகள் எப்படி செயல்படுத்தப்படும் என்பதை பார்க்க வேண்டும். 

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி போட்டியிடும் தொகுதியில் தேர்தலை நிறுத்த வாய்ப்பு!! கோவை தெற்கில் பணப்பட்டுவாடா புகார்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share