×
 

வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு! வேணாவே வேணாம்! சாதி ஓட்டு பார்த்த மீதி ஓட்டு போயிரும்! திமுக குழப்பம்!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வாக்குறுதியை, தேர்தல் அறிக்கையில் இணைக்க தி.மு.க., தலைமை விரும்புகிறது; ஆனால், அக்கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடி பிடிக்கின்றனர்.

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக-வில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை சட்டரீதியாக அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் சேர்க்க திமுக தலைமை விரும்புகிறது. ஆனால் கட்சியின் உள்ளேயே பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது கட்சியில் பிளவை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல தரப்பினரின் கோரிக்கைகளை சேகரித்து வருகிறது.

அதேநேரம் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் 'பென்' நிறுவனம் சார்பிலும் தனி குழு அறிக்கை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸை நம்பாதீங்க! கால வாரிடுவாங்க!! ஸ்டாலினுக்கு கனிமொழி கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது வன்னியர் சமூகத்தில் வரவேற்பை பெற்றாலும், மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அதிமுகவுக்கு எதிராக திரும்பின. இதனால் 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற உதவிய ஓட்டுகள் முக்கியமானவை. பின்னர் உச்ச நீதிமன்றம் அந்த இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தது. ஆனால் திமுக அரசு இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இப்போது வன்னியர் ஓட்டுகளை மீண்டும் பெறுவதற்காக திமுக தலைமை இந்த வாக்குறுதியை அறிவிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இது பல சிக்கல்களை உருவாக்கும் என்று கட்சி வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. இந்த கோரிக்கை தென் மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தும். 

வட மாவட்டங்களில் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாமல் தேர்தலுக்கு மட்டும் வாக்குறுதி கொடுப்பதாக விமர்சனம் எழும். எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என்று திமுக-வில் உள்ள வன்னியர் சமூக நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த தேர்தலில் கொடுத்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றன. இந்நிலையில் மீண்டும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை கொடுப்பது கட்சியின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்று மூத்த நிர்வாகிகளும் தலைமையிடம் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் திமுக-வின் தேர்தல் உத்தியை பாதிக்கலாம். வன்னியர் சமூக ஓட்டுகள் முக்கியமானவை என்பதால் தலைமை இதை எப்படி கையாளும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? தேஜ கூட்டணியில் இடமா? இபிஎஸ் பளீச் பதில்!! வாய்ப்பில்ல ராஜா?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share