உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!
உதயகுமார் என்று ஒரு ஆள் இருந்தார் அவர் பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கிறது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் நடத்தக்கூடிய பிரச்சார கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தலைமை உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர்: இன்று அதிமுகவில் இருந்து உருவாக்கி அண்ணா உருவாக்கிய திமுகவில் இணைந்திருக்கிறேன் என்று சொன்னால் முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என்றார்.
புரட்சித் தலைவர் தீட்டிய சட்ட விதிகளின்படி தான் 50 ஆண்டுகாலம் நடந்தது அம்மா அவர்கள் சட்ட விதிகள் படி தான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருந்தார் எடப்பாடி என்ற பழனிச்சாமி ஒரு விபத்தினால் தமிழகத்தின் முதலமைச்சராக ஊர்ந்து ஊர்ந்து சென்று சின்னம்மாவின் காலை பிடித்து முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு முதலமைச்சரையே சின்னமாவே இழிவாக பேசிய ஒரு நம்பிக்கை துரோகி தமிழக அரசியலில் சொன்னால் அது எடப்பாடி பழனிச்சாமி தான்.
அண்ணா திமுகவை இன்று எடப்பாடி திமுகவாக மாற்றி மிகப்பெரிய படுகுழியில் இயக்கத்தை தள்ளி, மிகப்பெரிய துரோகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவராகவே பொதுச்செயலாளர் பட்டம் சூட்டிக்கொண்ட கடந்த 2021 தேர்தல் நடைபெற்ற போது 19 தலைமை கழகத்தில் கூட்டம் நடத்தி அடுத்த முதலமைச்சராக அவர் தான் வரவேண்டுமான அவரது அடிமைகளை வைத்து பேச வைத்தார். அதன் பலன் என்ன?, அவர் என்றைக்கு பொதுச்செயலாளராக பொறுப்பேற்றாரோ அந்த நாள் முதல் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் இப்படி 11 தேர்தலிலும் கழகத்தை படு தோல்வி அடையச் செய்த ஒரே நபர் யார் என்று சொன்னால் எடப்பாடி பழனிச்சாமி தான்.
இதையும் படிங்க: ஊர்ந்து போய் பதவி வாங்கியவர் இபிஎஸ்... நன்றி இல்ல..! OPS சரமாரி விமர்சனம்..!!
2001 இல் அம்மா அவர்கள் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாமல் இருந்த சூழ்நிலை இருந்தபோது என்னிடம் கொடுத்தார்கள் மீண்டும் ஒரு மாதம் கழித்து அம்மாவையே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்த தொண்டன் நான் தான். 2006, 2016 காலக்கட்டத்திலும் ஜெயலலிதா என்னைத்தான் முதலமைச்சராக நியமித்தார்கள்.
உதயகுமார் என்று ஒரு ஆள் இருந்தார் அவர் பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கிறது ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நின்றேன் அப்போது ஆறு பன்னீர்செல்வத்தை கூப்பிட்டு வந்து நிறுத்தியவர் நிறுத்தப்பட்ட ஆறு பேரும் அண்ணா திமுகவில் நிறுத்தப்பட்ட அனைவருமே டெபாசிட் தொகையை இழந்தார்கள் என்பதுதான் உண்மை கட்சியை படுகுழியில் தள்ளிய பெருமை யார் என்று சொல்லுங்கள் என மக்களை நோக்கி கேட்டு கட்சியை குழி தோண்டி புதைத்தவர்கள் ஒன்று எடப்பாடி பழனிச்சாமி இன்னொன்று உதயகுமார் என காட்டமாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்... திமுக சார்பில் போட்டியிட ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு..!!