உதயநிதியின் மாஸ்டர் பிளான்....! ஆட்டம் காணும் அறிவாலயம்... திமுகவில் பூகம்பம்...!
அடுத்த கட்டமாக அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த 40 அவர்களது விசுவாசிகளின் தொகுதி தொகுதிகளை உதயநிதி கேட்டுள்ளார்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக திமுக இந்த முறையும் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை தான் நிலைநாட்ட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணி மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பிளான்களை அடுத்தடுத்து பல போட்டு கட்சியை மேலும் வலுப்படுத்தி வருகின்றார்.
அதன்படி தனது தாத்தா காலத்து மாவட்ட செயலாளர்களையும், அமைச்சர்களையும் மாற்ற எண்ணிய உதயநிதி தகுதியுடைய இளைஞர் அணியினர் பட்டியலை தலைமையிடம் கொடுத்ததாக பேசப்பட்டது.
இதையும் படிங்க: தெறிக்கவிடலாமா... தமிழகத்திலேயே முதல் முறை... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்...!
அடுத்த கட்டமாக அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த 40 அவர்களது விசுவாசிகளின் தொகுதி தொகுதிகளை உதயநிதி கேட்டுள்ளார். இதில் முக்கால்வாசி சீனியர்கள் என்பதால் அங்கெல்லாம் பஞ்சாயத்து வெடிக்க தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் எனவும் தெரிகிறது.
இதையும் படிங்க: மக்கள் முகத்தில் மகிழ்ச்சி... அதுவே திமுக அரசின் வெற்றிக்கு சாட்சி... உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...!