×
 

இந்த ஆப் உங்க போனில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க... வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்...!

சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதே இன்றைய நாளில் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது.

இந்தியாவில் ஆன்லைனில் பணம் மோசடி செய்யப்படுவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யுபிஐ மூலம் பணம் மோசடி, வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய வைத்து நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடுவது , போலியான முதலீட்டு திட்டங்கள் குறித்து ஆசை வார்த்தைகளை கூறி நம்மை முதலீடு செய்ய வைத்து பணம் மோசடி செய்வது என பல வகையான மோசடிகள் நாள்தோறும் புது புது வடிவத்தில் நம்மை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றன.

சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதே இன்றைய நாளில் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. இந்நிலையில் புதுவிதமான ஒரு ஆப் மூலமாக தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் மோசடி குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். செல்போன்களில் தொழில் தொடங்க கடன் வழங்குவது, தொழிலுக்கு யோசனைகள் வழங்குவது என பல்வேறு திட்டங்களைக் கண்டு வாழ்வை பாழாக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

நெல்லையில் சமீபத்தில் மருத்துவர், வங்கி மேலாளர், நாகர்கோவில் பாதிரியார் என பல உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் நல்ல ஊதியம் வாங்குபவர்கள் கிரிண்டர் செயலியால் பணத்தை இழந்துள்ளனர். சமீப காலமாகவே இது போன்ற தவறான ஆன்லைன் செய்திகளால் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். ஏராளமானவர்கள் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி போலீசில் புகார் அளிக்காமலே சென்று விடுகின்றனர். 

இதையும் படிங்க: கால் வெக்குற இடமெல்லாம் கன்னிவெடி… ஜேசிபி மூலம் விஜய்க்கு மாலை… CASE போட்ட போலீஸ்…!

இதுபோன்ற செயல்களில் படிப்பிரிவு இல்லாதவர்கள் பணத்தை இழப்பது மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. ஆனால் படித்து பட்டம் பெற்ற பற்றதாரிகள் அரசு பணிகளில் இருப்பவர்கள் தான் இந்த செயலிகளில் சிக்கி சபளத்தால் மாட்டிக்கொண்டு பணத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் செல்போன்களில் அரசின் புதிய திட்டங்கள் முன்னேறுவதற்கான வழிகள் தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் இருக்கும் நிலையில் தவறான செயல்களை நோக்கி இளைஞர்கள் சென்று வாழ்வை பாழாக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: H1B விசாவிற்கு போட்டியாக K விசா... சீனாவின் புதிய TRICKS...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share