×
 

1971-ல சரண் அடைஞ்சத மறந்துராதீங்க.. இந்தியா உங்க Pant-ஐ கழட்டிருச்சே.. பாக்.-ஐ கிழித்து தொங்கவிட்ட பலூச் தலைவர்..!

1971-ல் நடந்த போரில் பாகிஸ்தான் அவமானகரமான தோல்வியடைந்து சரண் அடைந்ததை மறந்துவிடாதீர்கள் என்று ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு, பலுாசிஸ்தான் தலைவரும் முன்னாள் முதல்வருமான அக்தர் மெங்கல் தெரிவித்துள்ளார்.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக (Victory Day) அனுசரிக்கப்படுகிறது. அதுவரை கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பகுதி, இந்தப் போருக்குப் பிறகுதான் வங்கதேசம் என்ற தனி நாடாக உருவானது. 1971இல் சுமார் 13 நாட்கள் நடந்த அந்தப் போர் இந்தியாவின் வலிமையை உலகுக்கு பறைசாற்றியது.

இந்த போருக்கு முன், இன்றைய பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்றும், இன்று தனி நாடாக உள்ள வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து தனி நாடு ஆவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். பாகிஸ்தானில், வங்காள மொழி பேசிய மக்கள் மோசமாக நடத்தப்பட்டதோடு, தேர்தல் முடிவுகளிலும் குளறுபடி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலைப் போரை தொடங்கினார்கள்.

இதையும் படிங்க: போர் ஒத்திகை என்றால் என்ன..? தேசிய அளவில் என்ன நடக்கும்..? தெரிந்து கொள்ளுங்கள்..!

அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, கிழக்கு பாகிஸ்தான் மக்களுடைய விடுதலைப் போருக்கு முழு ஆதரவு கொடுத்தார். இந்நிலையில், 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியன்று, ஆபரேஷன் கெங்கிஸ் கான் என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் 11 விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலளிக்கும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படை அனைத்தையும் களமிறக்கி, தரைவழித் தாக்குதல், வான் வழித் தாக்குதல், கடல்வழித் தாக்குதல் என்று மும்முனைத் தாக்குதலை பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்டது.

13 நாட்களுக்கு நடந்த இந்தப் போரில், டிசம்பர் 15-ம் தேதியன்று இந்தப் போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியது. அடுத்த நாளான டிசம்பர் 16-ம் தேதியில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி (Amir Abdulla Khan Niazi), இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்தார். இந்தப் போருக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாகவும் மேற்கு பாகிஸ்தான் இன்றைய பாகிஸ்தானாகவும் பிரிந்தன.

காஷ்மீர் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் குடிகொண்டுள்ள இந்த நிலையில் தற்போது வீர வசனம் பேசி வரும் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்த சம்பவத்தை பலூச் சுதந்திர கோரிக்கையை வலியுறுத்தும் தலைவர்கள் நினைவூட்டி உள்ளனர். பலூசிஸ்தான் தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான, சர்தார் அக்தர் மெங்கல் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவம் 1971ம் ஆண்டு அவமானகரமான தோல்வியையும் 92,000 வீரர்களின் சரணடைதலையும் ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களின் ஆயுதங்கள் மட்டுமல்ல, அவர்களின் கால்சட்டை கூட இன்னும் அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம் வரலாற்று மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் பேண்ட்டை கழற்றி கீழே வைத்து சரணடைந்தீர்கள். அப்படி யாரும் இதுவரை சரணடைந்ததில்லை. அத்தகைய அவமானத்தை எதிர்கொண்ட நீங்கள் அதை மறக்கலாமா?என சர்தார் அக்தர் மெங்கல் கூறினார்.

இதையும் படிங்க: சொல்லி அடிக்கும் பலுசிஸ்தான்..! உள்நாட்டு கலவரத்தால் நிம்மதி இழந்த பாக்., 90 வீரர்கள் மரணம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share