திக்.. திக்.. நொடிகள்.. திடீர் டிரோன் அட்டாக்.. வானில் வட்டமடித்த கனிமொழி விமானம்...!
திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யாவுக்கு பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த பின் நீண்ட நேரத்திற்கு பின் பத்திரமாக தரை இறங்கியது
நள்ளிரவில் ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் யுக்ரைனிலிருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யாவுக்கு பயணித்த விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் மீது கடந்த 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இது தொடர்பாக உலக நாடுகளுக்கு இந்தியாவின் தரப்பு நியாயத்தை எடுத்திருப்பதற்காக இந்தியாவின் சார்பில் ஏழு குழுக்களானது அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏழு குழுக்களில் ஒரு குழுவாக தமிழ்நாட்டை சேர்ந்த எம்பி கனிமொழி கருணாநிதி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழு நேற்றுமாஸ்கோவிற்கு புறப்பட்டுச் சென்றது. இந்த குழு மாஸ்கோ சென்றிருந்த அதேசமயத்தில் மாஸ்கோ விமான நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பயங்கரவாத எதிர்ப்பு... ரஷ்யா செல்கிறது கனிமொழி தலைமையிலான குழு..!
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த எம்பி கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட தலைமையிலான குழுவினர் சென்ற விமானம் தரையறங்க முடியாமல் வானிலையை நீண்ட நேரம் வட்டம் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவினுடைய பிரதிநிதிகளுடன் தரையிறங்க வேண்டிய விமானம் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது ரஷ்யாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
பின்னர் மாஸ்கோவில் விமானம் பத்திரமாக தரையிறங்கிய பிறகு, ரஷ்ய அதிகாரிகள் அரசு மரியாதையுடன் வரவேற்றனர். இந்த குழு இன்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தவுள்ளது. அதை தொடர்ந்து லாபியா, சுலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: “அவர் பெரியார் வழியில் வந்தவனாக இருக்க முடியாது” - சொந்த கட்சிக்காரர்களையே வெளுத்து வாங்கிய கனிமொழி!