×
 

அடேங்கப்பா..!! துபாய் டூரிஸ்ட்களுக்கு ஜாக்பாட்..! சுற்றுலாவை ஊக்குவிக்க சூப்பர் பிளான்..!!

துபாயில் சுற்றுலாவை ஊக்குவிக்க முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது

துபாய்க்கு விருந்தினராக சென்றால் 3,000 திர்ஹம் சலுகை என்று சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், துபாய் சுற்றுலாத்துறை புதிய சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, துபாயில் வசிப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களை விருந்தினர்களாக அழைத்து வந்தால், ஒரு விருந்தினருக்கு 3,000 திர்ஹம் வரை சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை ஜூலை 20 முதல் அக்டோபர் 31 வரை துபாயிற்கு விருந்தினர்களாக வருபவர்களுக்கு பொருந்தும் என்ன தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வழங்கப்படும் 3,000 திர்ஹம் சலுகையை, ஹோட்டல் தங்குமிடம், உணவு மற்றும் அதனுடன் தொடர்புடைய சுற்றுலா செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையை பெறுவதற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களின் வருகையை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஒருவர் அதிகபட்சமாக ஐந்து விருந்தினர்களை இந்தத் திட்டத்தின் கீழ் அழைத்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... சபரிவர்மன் வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி...!

இந்தச் சலுகையை துபாய் மீனா அல் சலாமு (Mina Al Salam), லா மெரிடியன் (Le Meridien), மெலியா டெசர்ட் பாம் (Melia Desert Palm), கரீம் (Careem), ஹாலா (Hala) உள்ளிட்ட கூட்டாளி நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்கள் மட்டுமல்லாமல், அங்கு சட்டபூர்வமாக வசித்து வரும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துபாயில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இந்தச் சிறப்பு சலுகைத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உணவின் தரம், அடிப்படை வசதிகள்..! சமூக நீதி விடுதியில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share