திக்... திக்... காட்சிகள்....!! கண் இமைக்கும் நேரத்தில் சீட்டு கட்டு போல் சரிந்த பிரம்மாண்ட பாலம்...!
சில நாட்களுக்கு முன்பு சிச்சுவான் மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்ட ஹாங்கி பாலம் இடிந்து விழுந்தது.
சீனாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிச்சுவான் மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்ட ஹாங்கி பாலம் இடிந்து விழுந்தது. இது திபெத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய பாலமாகும். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று சிச்சுவான் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் பிரதான நிலப்பகுதியை திபெத்துடன் இணைக்கும் இந்தப் பாலம், அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பாலத்தின் வழியாக நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அந்த சக்தியைத் தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மார்காங் நகருக்கு அருகிலுள்ள ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையத்திற்கு அருகில் இந்த கோர விபத்தானது அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க: தொடர் நிலநடுக்கத்தால் சிக்கித்தவிக்கும் ஆப்கானிஸ்தான்..!! உதவிக்கரம் நீட்டும் இந்தியா..!!
இந்த வீடியோவை X தளத்தில் கோலின் ரக் வெளியிட்டுள்ளார். பாலம் இடிந்து விழுந்தபோது எடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த வீடியோவில் நிலச்சரிவும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பாலம் சரிந்து விழுந்தவுடன், ஒரு பெரிய தூசி படலம் விண்ணை முட்டும் அளவிற்கு எழுகிறது. பாலத்தின் இடிபாடுகள் காற்றில் பறப்பதைக் காணலாம்.
சில நிமிடங்களில், பாலத்தின் அடியில் இருந்த தரை இடிந்து விழுகிறது, அதன் தூண்கள் சரிந்து, அனைத்தும் ஆற்றில் விழுந்தன.
சிச்சுவான் மாகாணம் தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. இது 758 மீட்டர் நீளமுள்ள பாலம். திபெத்துடன் இணைக்க சீனா இதை கட்டியது. இது சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இந்த பாலத்தின் கட்டுமானம் ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவு காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாகவே பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த அதிகாரிகள், திங்கள்கிழமை பிற்பகல் முதல் பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதித்தனர். அருகிலுள்ள நிலச்சரிவுகள், சாலைகளில் விரிசல்கள் மற்றும் தரை நகர்வுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. செங்குத்தான மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த சரிவு ஏற்பட்டதாக நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். சேதத்தை மதிப்பிடுவதற்கும் பாலத்தின் பாதுகாப்பை தீர்மானிப்பதற்கும் அவசர மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
NEW: 758-meter-long Hongqi bridge in the southwestern province of Sichuan, China collapses just months after opening.
Construction on the Chinese bridge had finished earlier this year, according to Reuters.
The collapse of the bridge was reportedly triggered by… pic.twitter.com/fyxMAW9JNN
— Collin Rugg (@CollinRugg) November 11, 2025
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!