×
 

புரட்டி எடுக்கும் கனமழை... காரைக்காலை அடுத்து இந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை...!

மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளிகளுக்கு நாகப்பட்டினம் ஆட்சியர் விடுமுறை அறிவித்திருக்கிறார். 

மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளிகளுக்கு நாகப்பட்டினம் ஆட்சியர் விடுமுறை அறிவித்திருக்கிறார். 

நாகைப்பட்டினம் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, நள்ளிரவு முதல் பல பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. கனமழை என்கின்ற அளவிலும் மழை பெய்வதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

குறிப்பாக வானிலை ஆய்வு மையம் நேற்று கனமழை பெய்வது மற்றும் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ள இடங்களாக பல மாவட்டங்களை அறிவித்திருக்கிறது. அதில் நாகப்பட்டினம் மாவட்டமும் ஒன்று. கடலோரம் மாவட்டமாக இருக்கக்கூடிய நாகப்பட்டினம் மாவட்டத்தில் நள்ளிரவில்லிருந்து ஒரு சில பகுதிகளில் மிக கனமழை என்கின்ற அளவில் மழை பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: அடித்து வெளுக்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!

தற்போது இன்று காலையில் பள்ளி நேரம் துவங்குவதற்கு முன்பாகவே, மாணவர்கள் பள்ளிக்கு தயாராகவதற்கு முன்பாகவே இந்த அறிவிப்பு என்பது வெளியாகி இருக்கிறது. இதுபோன்ற மழை காலங்களில் வருவாய் துறையினர் மாவட்ட ஆட்சியர் மூலமாக விடுமுறை என்பதை அறிவிப்பார்கள்.

அதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையை பெற்று தற்போது மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டுமான அந்த விடுமுறையை அறிவித்திருக்கிறது. ஒரு சில இடங்களில் அதிக கனமழை என்கின்ற அளவை பெறுவதன் காரணமாக பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளுக்குமான விடுமுறை என்பது தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. 

 இதேபோல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதால் தற்போது காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை... இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share