×
 

#BREAKING: கேரள செவிலியர் நிஷாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு! கடைசி திக் திக் நிமிடங்கள்..!

ஏமன் நாட்டில் கொலை வழக்கில் சிக்கிய கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு, கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், செவிலியர் படிப்பு முடித்து 2008ஆம் ஆண்டு ஏமனில் செவிலியர் பணிக்காகச் சென்றார். 2011இல் டோமி தாமஸ் என்பவரைத் திருமணம் செய்து, ஒரு குழந்தையுடன் ஏமனில் வசித்து வந்தார். இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு, நிமிஷா பிரியா, ஏமன் குடிமகனான தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். இவர் நிமிஷாவின் தொழில்முறை பங்குதாரராக இருந்தவர்.

இருவரும் இணைந்து ஏமனில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கியிருந்தனர். மருத்துவமனை நல்ல வருமானம் ஈட்டத் தொடங்கியபோது, இருவரிடையே மோதல் ஏற்பட்டது. மஹ்தி, நிமிஷாவின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்து, அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில், நிமிஷா மஹ்திக்கு அதிக அளவு மயக்க மருந்து செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மஹ்தி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டு, ஒரு தண்ணீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து நிமிஷா கைது செய்யப்பட்டார்.

பின்னர் 2018இல் ஏமனின் சனா நகரில் உள்ள கீழமை நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் 2023 நவம்பரில் ஏமன் உச்சநீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், 2024இல் ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி மரண தண்டனையை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தார். அதன்படி நாளை நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

இந்த நிலையில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதில் இந்திய அரசுக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏமன் நாட்டின் விதிப்படி ரத்தப் பணம் என சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை கொடுத்தால் தண்டனை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: போடுறா எல்லையில கேட்டை... கேரளாவில் தீயாய் பரவும் நிபா வைரஸ் - ஹை அலர்ட்டில் தமிழ்நாடு...!

இதையும் படிங்க: என்னது.. அருணாசலமா..?? எடுங்க முதல்ல.. தி.மலை பேருந்துகளில் இருந்த அருணாசலம் பெயர் நீக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share