பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்புக்கும் மிகச்சிறந்த உறவு உள்ளது!! ஐஸ் வைக்கும் வெள்ளை மாளிகை!!
அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே மிகச் சிறந்த நட்புறவு நிலவுவதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் பதற்றம் உச்சத்தில் உள்ளது. இந்த சூழலில் இரு தலைவர்களும் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர்.
பிரதமர் மோடியுடன் டிரம்ப் நடத்திய உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக வெள்ளை மாளிகை விவரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறந்த நிலையில் வைத்திருப்பது, உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியம் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்தியா எப்போதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!
வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் மிகச் சிறந்த உறவைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்று கூறினார்.
இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எதிர்காலத்தில் இன்னும் வலுப்பெறும் என்றும், இரு தலைவர்களும் எந்த சவால்களையும் சந்தித்து சாதிப்பார்கள் என்றும் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் ஈரான் போர் தொடங்கிய பிறகு இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் முக்கிய உரையாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்முஸ் ஜலசந்தி மூலம் எண்ணெய் போக்குவரத்து தடைபடாமல் இருக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியதாகவும், உலக அமைதிக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதும் உரையாடலின் மையப் பொருளாக இருந்தது.
அமெரிக்க-இந்திய உறவு கடந்த சில ஆண்டுகளாக வலுவடைந்து வரும் நிலையில், தற்போதைய மேற்காசிய நெருக்கடியில் இந்த உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளும் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை கொண்டுள்ளன. டிரம்ப் நிர்வாகம் இந்தியாவை தனது முக்கிய உத்தியோகபூர்வ பங்காளியாக கருதுகிறது.
இந்த உரையாடல் இரு நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் சமயத்தில், அமெரிக்காவுடனான வலுவான உறவு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய போர் பதற்றம் தணிந்து, அமைதி நிலவ வேண்டும் என்பதே இரு தலைவர்களின் பொது நிலைப்பாடாக உள்ளது.
இதையும் படிங்க: மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!