×
 

நாங்க STRONG... திமுக கூட்டணியில் தான் குழப்பம்... EPS தடாலடி..!!

திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் திமுகவுடன் தொகுதி பங்கீடு மற்றும் அதிகாரப் பங்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதும், அண்மையில் கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் பேசிய போதும் தீர்வு எட்டப்படவில்லை என்பதும் முக்கிய விஷயமாக இருக்கிறது.

இதனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில பிரிவினர் தனியாகச் செயல்படலாம் அல்லது வேறு கூட்டணியை நோக்கி நகரலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. திமுகவுடன் கூட்டணி என்று தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் சந்தேகத்தை அதிகப்படுத்தும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. தமிழக வெற்றி கழகத்துடன் ஹைதராபாத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்க காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியது.

ராகுல் காந்தி ஹைதராபாத்தில் முகாமிட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் அங்கு சென்றதால் சந்தேகம் வலுத்தது. அதைவிட முக்கியமான ஒன்று instagram மற்றும் X ஆகிய தளங்களில் முதலமைச்சர் ஸ்டாலினை ராகுல் காந்தி அன் ஃபாலோ செய்திருப்பதாகவும் கூறப்படும் சம்பவங்கள் சந்தேகங்களை அதிகாரிக்கச் செய்தது. இந்த நிலையில், நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க: All the best..!! 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு... EPS, விஜய், சீமான் மாணவர்களுக்கு வாழ்த்து..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக கூட்டணிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கூட்டணி சுமூகமாக உள்ளது என்றும் திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுவதாகவும் தெரிவித்தார். திமுக கூட்டணிகள் காங்கிரஸ் கட்சியை இருக்குமா இல்லையா என்பது தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வருவதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் இழுபறி... விடிந்ததுமே இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share