×
 

பட்டாக்கத்தி TO வெடிகுண்டு... அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு... விளாசிய EPS...!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

ராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் இரவு நேர காவலாளிகள் இருவர் கோயிலுக்குள் வெட்டி கொவை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த இரட்டை கொலை சம்பவத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார். கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு என்றும் ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு கண்டனம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: #BREAKING இபிஎஸ் அற்பத்தனம் அம்பலமானது... ராமதாஸ், நயினாருக்கும் சவுக்கடி பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி...!

கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: "நான் என்ன தப்பு செஞ்சேன்... கட்சி நல்லா இருக்கனுன்னு தானே நினைச்சேன்..." - அதிமுக Ex. எம்.பி. சத்தியபாமா கதறல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share