அட்ரா சக்க! பசுமை வீடு, மா தொழிற்சாலை....மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட இபிஎஸ்!
அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு பசுமை வீடு கட்டிதரப்படும் என்றும், மா தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் ஜூலை ஏழாம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மக்களிடையே திமுக அரசு பற்றியும், அதிமுகவின் சாதனைகள் தொடர்பாகவும் விவரித்து வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வரும் 24ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார்.
இந்த நிலையில், மக்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்ததும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் "மா" தொழிற்சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரியில் போதிய மருத்துவர்களை திமுக அரசு நியமிக்கவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: சீப்பை ஒளிச்சா கல்யாணம் நிக்குமா? இபிஎஸ் போஸ்டர்கள் அகற்றப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம்..!
திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி., அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா...இது எந்த விதத்தில் நியாயம் என கேட்டார். ஆற்றங்கரைகளில் கட்டுமான பணிக்காக ஒருபோதும் கண்டிப்பாக மணல் அள்ளக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் நான் தான் என்று கூறிய அவர், நாகப்பட்டினம் தொகுதி மக்கள் திமுக நடத்தும் மன்னராட்சியை அடியோடு வெறுப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: ஒரு விஷயம் சொல்லட்டுமா? நெருக்கடியிலும் விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்தது அதிமுக தான்! - இபிஎஸ்