கழிவறை முதல் காவாங்கரை வரை கலைஞர் பெயர்... MGRஐ மறைக்க முயற்சிக்கும் திமுக... அதிமுக கண்டனம்...!
எம்ஜிஆர் பெயரை மறைக்க திமுக முயற்சிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மறைந்தும் மறையாமலும், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருபவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் என்று கூறினார்.
கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, தீய சக்தி தி.மு.க-வினருக்கு MGR மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றுவரை மறையவில்லை என்பது, தற்போதும் திமுக-வினரது செயல்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது என்று கூறினார். MGR முதலமைச்சராக இருந்த போது, 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார் என்றும் தெரிவித்தார்.
அந்த பல்கலைக்கழகம் இன்றுவரை பல தமிழ் அறிஞர்களை உருவாக்கி பெரும்பேறு பெற்று வருகிறது என்று கூறினார். தமிழை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தி வந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் பெயரை வெட்கம் இல்லாமல் கழிவறை முதல் காவாங்கரை வரை வைக்கும் அவரது மகன் ஸ்டாலின், MGR பெயரை, அவர் துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியிருப்பது, ஸ்டாலினுடைய மமதையின் உச்சத்தைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் உயிர் பயத்திலேயே வாழணுமா? தமிழ்நாடு தவித்தது போதும்... இபிஎஸ் திட்டவட்டம்...!
'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்திவிடலாம்' என்று நினைப்பதுபோல், தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து MGR படத்தை நீக்கிவிட்டால், அவர் புகழை அழித்துவிடலாம் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். வந்து வன்மத்தோடு செயல்படுவதை திமுக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை அமையட்டும்... EPS ஆங்கில புத்தாண்டு வாழ்த்து...!