×
 

என்னது கஞ்சா நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மா. சு..! விளாசிய இபிஎஸ்...!

போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்தை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருட்கள் பழக்கம் அதிகரித்திருப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள், அரசியல் அரங்கில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் கடத்தல் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் உச்சமாக, 2025ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்த சில சம்பவங்கள் இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளன.

எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறிவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறியதால் இளைஞர்கள் ஆபத்தில் உள்ளனராகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல. 2024ஆம் ஆண்டிலேயே, திமுகவைச் சேர்ந்த ஒரு முன்னாள் நிர்வாகி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியபோது, எதிர்க்கட்சிகள் இதை பெரிதாக எழுப்பின. அப்போது திமுக அந்த நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கியது.

ஆனால் எதிர்க்கட்சிகள் அரசுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டின. ஆளுநர் ஆர்.என். ரவி கூட 2025இல் இளைஞர்களிடையே போதை பழக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு, அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையால் இது நடப்பதாக கூறினார். நேற்றைய தினம், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பின், போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறோம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். 

இதையும் படிங்க: ஜன.4,5 ஆம் தேதிகளில் அதிமுக பொதுக்கூட்டம்... "EPS" பங்கேற்பு... முக்கிய அறிவிப்பு...!

கஞ்சாவை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக எங்கேயும் இல்லாத நிலை இருக்கிறது என்று கூறினார். குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சிகள் எங்கேயாவது விற்கிறார்கள் என்று தகவல் சொன்னால், அவர்களின் ரகசியம் பாதுகாத்து நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனிடையே, இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து உள்ளார். தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் என விமர்சித்து உள்ளார். கஞ்சா போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்றும் இபிஎஸ் விமர்சித்தார். 

இதையும் படிங்க: வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share