×
 

திமுகவுக்கு வெறும் 24 தொகுதி தான்... அதிமுக தான் கிங்... இபிஎஸ் திட்டவட்டம்...!

பெரும்பான்மை நிரூபிக்கும் தருணத்தில் திமுக அராஜகத்தில் ஈடுபடுவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், தீய சக்தி திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியதாக தெரிவித்தார். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரது ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம் என்று கூறினார். தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா என்ற கேள்வி எழுப்பினார். சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையின் நிரூபிக்கும் தருணத்தில் திமுகவினர் அராஜகம் செய்வதாகவும் அதிமுக ஆட்சி குறித்து திமுகவில் விமர்சனம் செய்ய இயலவில்லை என்றும் தெரிவித்தார்.

அனைத்து தேர்தல்களிலும் களப்பணி ஆற்றியவர்கள் இங்கே இருக்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டு பேசினார். 2026 சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சூழ்ச்சியால் தான் 2021 இல் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததாக தெரிவித்தார். 1991 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது என்றும் 2006 தேர்தலில் மைனாரிட்டி அரசு நடத்திக் கொண்டிருந்தது திமுக என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெ.வின் 9ம் ஆண்டு நினைவு நாள்..!! இது நடந்தே தீரும்..!! நினைவிடத்தில் சபதம் எடுத்த இபிஎஸ்..!!

2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்று குறிப்பிட்டார். நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவுக்கு 100% வெற்றி உறுதி என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார் 2021 தேர்தலில் 75 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதாகவும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களை அதிமுக கூட்டணி வென்றெடுத்தது என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கைது! இ.பி.எஸ். கடும் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share