×
 

15 மனைவி, 30 குழந்தைகள்!! குடும்பமாக சுற்றுலா சென்ற ஆப்ரிக்க மன்னர்! அதிர்ந்தது அபுதாபி ஏர்போர்ட்!

ஆப்ரிக்க மன்னர் ஒருவர், 15 மனைவியர், 30 குழந்தைகள், 100 வேலையாட்கள் என, 150 பேர் அடங்கிய பரிவாரங்களுடன் வந்திறங்கியதால் அபுதாபி விமான நிலையம் ஸ்தம்பித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னரான எஸ்வாட்டினியின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி, 15 மனைவியர் மற்றும் 30 குழந்தைகளுடன் தனி விமானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். அவரது வருகையால் விமான நிலையத்தின் மூன்று முனையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. 

பாரம்பரிய புலித்தோல் உடையில் மன்னரும், வண்ணமயமான ஆப்ரிக்க உடைகளில் அவரது மனைவியரும் குழந்தைகளும் தோன்றிய காட்சி, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொருளாதார ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

57 வயதான மன்னர் மஸ்வாட்டி, 1986 முதல் எஸ்வாட்டினியை ஆளும் மன்னராக உள்ளார். இவருக்கு 30 மனைவியரும், 35-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் உள்ளனர். இந்த பயணத்தில் 15 மனைவியர் மட்டுமே உடன்வந்தனர். இவரது தந்தை, முன்னாள் மன்னர் சோபுசா II, 125 மனைவியரையும், 210 குழந்தைகளையும், 1,000 பேரக்குழந்தைகளையும் கொண்டிருந்தார். 

இதையும் படிங்க: #BREAKING மதுரையில் உச்சக்கட்ட பரபரப்பு...அதிமுக எம்.எல்.ஏ. அதிரடி கைது... போலீசுடன் தகராறு...!

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் 'ரீட் டான்ஸ்' விழாவில் மன்னர் புதிய மனைவியை தேர்ந்தெடுக்கும் பழக்கம், உலகளவில் விமர்சனங்களை பெற்றுள்ளது. எஸ்வாட்டினியில் 60% மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் நிலையில், மன்னரின் ஆடம்பர வாழ்க்கை உள்நாட்டிலும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

அபுதாபி வருகையின்போது, மன்னரை அவரது பரிவாரங்கள் மரியாதையுடன் வரவேற்று, வீர வணக்கம் செலுத்தினர். இந்த பயணம், UAE-எஸ்வாட்டினி இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மேம்படுத்துவதற்காக நடந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால், மன்னரின் இந்த ஆடம்பர பயணம், எஸ்வாட்டினியின் பொருளாதார நெருக்கடியை பின்னணியில் வைத்து, உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மன்னரின் இந்த பயணத்தால், எஸ்வாட்டினியில் பொருளாதார மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: இந்தோனேஷியாவில் தொடரும் துயரம்! இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம்! பலி 61 ஆக அதிகரிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share