×
 
அணுசக்தி ஒப்பந்தம்!! முரண்டு பிடிக்கும் ஈரான்!! ஐரோப்பிய நாடுகள் வார்னிங்!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் (JCPOA) தொடர்பாக அது முரண்டு பிடிக்கறதால, ஐரோப்பிய நாடுகள் – பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி (E3) – கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்காங்க. ஈரான், ஒப்பந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்து, யூரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதிகரிச்சதால, E3 நாடுகள், 2015-க்கு முந்தைய யூஎன் பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டுவர மிரட்டறாங்க. இந்த ‘ஸ்னாப்பேக்’ மெக்கானிசம், அக்டோபர் 18-க்கு முன்னாடி அமல்படுத்தப்படலாம்னு சொல்றாங்க, இது உலக அரங்கில பெரிய பதற்றத்தை உருவாக்கிருக்கு.

2015-ல் JCPOA ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுத தயாரிப்பிலிருந்து தடுக்க, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளால உருவாக்கப்பட்டது. ஈரான் இதுக்கு ஒப்புக்கொண்டதால, யூஎன் தடைகள் நீக்கப்பட்டன. ஆனா, 2018-ல் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வெளியே இழுத்து, தடைகளை திரும்ப கொண்டுவந்தார். இதனால ஈரான், யூரேனியம் செறிவூட்டலை (இன்ரிச்மென்ட்) 60% வரை உயர்த்தியது – இது ஆயுத நிலை 90%-க்கு ரொம்ப அருகாமையில இருக்கு. 

இதை இஸ்ரேல், "நமக்கு அச்சுறுத்தல்"னு சொல்லி, ஜூன் 2025-ல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவா, ஈரானின் அணு வளாகங்கள் (ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான்) மீது குண்டுவீசியது. இந்த 12 நாள் மோதல், அணு வளாகங்களை சேதப்படுத்துச்சு. பின்னர், அமெரிக்கா அழைப்பு விடுத்ததால, இஸ்ரேலும் ஈரானும் மோதலை நிறுத்தினாங்க.

இதையும் படிங்க: லெபனான்ல இருந்து நாங்க வெளியேறுறோம்!! ஆனா ஒரு கண்டிஷன்!! ட்விஸ்ட் வைத்த நெதன்யாகு!!

இப்போ, JCPOA-வை மீட்டெடுக்க, E3 நாடுகள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (ஆகஸ்ட் 27) ஈரானோட பேச்சுவார்த்தை நடத்தினாங்க. அவங்களோட கோரிக்கைகள்: ஈரான், IAEA (சர்வதேச அணுசக்தி முகமை) ஆய்வாளர்களை அணு வளாகங்களுக்கு அனுமதிக்கணும்; 400 கிலோ 60% செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை வேறு நாட்டுக்கு மாற்றணும்; அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது. 

ஆனா, ஈரான் இதையெல்லாம் மறுத்துடுச்சு. "அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களால நம்பிக்கை இழந்தோம்"னு சொல்லி, ஆய்வுகளை நிறுத்தி, யூரேனியம் ஸ்டாக் விவரங்களை கொடுக்க மறுத்திருக்கு. இதனால, ஜெனீவா பேச்சுவார்த்தை இழுபறியில முடிஞ்சுது.

ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு ஆதரவா, "ஸ்னாப்பேக் பிளாக்மெயில், இது அமெரிக்க-இஸ்ரேல் அழுத்தத்தால நடக்குது"ன்னு விமர்சிக்கறாங்க. IAEA, "ஈரான் இன்னும் அணு ஆயுதம் தயாரிக்கல, ஆனா அதோட அணு திட்டம் வேகமா வளர்ந்திருக்கு"ன்னு சொல்றது. ஈரான், ரஷ்யா, சீனாவோட கூட்டணியை வலுப்படுத்தி, NPT (நியூக்ளியர் நான்ப்ராலிஃபரேஷன் ஒப்பந்தம்) விலக மிரட்டறது. இது, மேற்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரிக்குது, குறிப்பா இஸ்ரேல்-ஈரான் மோதல் மீண்டும் வெடிக்க வாய்ப்பு இருக்கு.

இதையும் படிங்க: மருத்துவமனை மீது நடந்த தாக்குதல்!! அப்பாவி மக்கள் துடிதுடித்து பலி!! மழுப்பும் இஸ்ரேல்!!

Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share