×
 

அதிரடி தீர்ப்பால் அதிர்ந்த தென்கொரியா..!! தொழிலதிபருக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு..!! காரணம் இதுதான்..!!

தென் கொரிய வரலாற்றில் விவாகரத்து வழக்கில் இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய இழப்பீடுகளில் இதுவும் ஒன்று.

சியோல் உயர் நீதிமன்றம், எஸ்கே குழுமத் தலைவர் சே டே-வோன் மற்றும் முன்னாள் அதிபர் ரோ டே-வூவின் மகள் ரோ சோ-இயோங் இடையே நடைபெற்ற நீண்டகால விவாகரத்து வழக்கில் முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நேற்று பிறப்பிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், சே டே-வோன் தனது முன்னாள் மனைவிக்கு சொத்துப் பங்கீடாக 9440 கோடி வான் (சுமார் 6,200 கோடி ரூபாய் அல்லது 64 கோடி டாலர்) ரொக்கமாக செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நிறுவனப் பங்குகளை விற்காமலோ மாற்றாமலோ, முழுத் தொகையையும் பணமாக வழங்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் தெளிவான நிபந்தனை. தென் கொரிய வரலாற்றில் விவாகரத்து வழக்கில் இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய இழப்பீடுகளில் இதுவும் ஒன்று.

இந்தத் தம்பதியினர் 1988-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு மூன்று குழந்தைகளுடன் சுமார் 30 ஆண்டுகள் வாழ்ந்தனர். 2015-ஆம் ஆண்டு சே டே-வோன் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்து குழந்தை பெற்றதை ஒப்புக்கொண்ட பிறகு உறவு முறிந்தது. 2017-இல் அவர் விவாகரத்து கோரினார். ரோ சோ-இயோங் 2020-இல் எதிர்மனு தாக்கல் செய்தார். பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நடந்த இந்த வழக்கு ‘நூற்றாண்டின் விவாகரத்து’ என அழைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!

முந்தைய உயர் நீதிமன்றத் தீர்ப்பில் 1.38 டிரில்லியன் வான் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்து மறுபரிசீலனைக்கு அனுப்பியது. தற்போதைய பரிசீலனையில் நீதிபதிகள், திருமணக் காலத்தில் உருவான சொத்துக்களில் ரோ சோ-இயோங்கிற்கு மூன்றில் ஒரு பங்கு (33.3 சதவீதம்) உரிமை உண்டு எனக் கணக்கிட்டு, 2024 ஏப்ரல் தேதியிலான பங்கு மதிப்பீட்டின் அடிப்படையில் தொகையை நிர்ணயித்தனர். தீர்ப்பு உறுதிப்பட்ட அடுத்த நாளிலிருந்து முழுத் தொகை செலுத்தப்படும் வரை ஆண்டுக்கு 5 சதவீத வட்டியும் செலுத்த வேண்டும்.

எஸ்கே குழுமம் தொலைத்தொடர்பு, குறைக்கடத்தி (எஸ்கே ஹைனிக்ஸ்), எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் தென் கொரியாவின் இரண்டாவது பெரிய குழுமமாகும். சே டே-வோன் இந்தக் குழுமத்தின் முக்கியப் பங்குதாரர். ரோ சோ-இயோங் ஆர்ட் சென்டர் நாபி அருங்காட்சியகத்தின் இயக்குநராக உள்ளார். இந்தத் தீர்ப்பு அவரது கோரிக்கைக்கு ஆதரவாக அமைந்துள்ளது. சே டே-வோன் தரப்பு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள நிலையில், வழக்கின் அடுத்த கட்டம் கவனிக்கப்படுகிறது. செல்வந்தர்களின் விவாகரத்து வழக்குகளுக்கு இது புதிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: "பழனி நில மோசடி சர்ச்சை"... போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share