#BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்..!
ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது ஃபால்கன் 9 விண்கலம். ஆறு முறை வானிலை, காரணங்களால் ஒட்டி வைக்கப்பட்ட ஆக்சியம் 4 திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. ஃபால்கன்9 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. விண்வெளி மையத்திற்கு சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சுபான்ஷு சுக்லா.
விண்வெளியில் வளரும் தாவரங்கள் உண்பதற்கு தகுதியானதாக இருக்கிறதா என்பது குறித்தும் நுண்ணுயிர் ஈர்ப்பு, வளர்ச்சிதை மாற்றம் மீள் உருவாக்கம், பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், விண் கதிர்கள் தாக்கும் அபாயத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.