×
 

பகீர் காட்சிகள்...!! - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்... கொளுந்துவிட்டு எரியும் எண்ணெய் சுத்தரிப்பு ஆலை...!

அமெரிக்காவில் மிகப்பெரிய கச்சாய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீவிபத்து நிகழ்ந்திருக்கிறது.

டெக்ஸாஸ் மாகாணத்தில் போர்ட் ஆர்தரில் உள்ள வலேரா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மிகப்பெரிய தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. பயங்கர சப்தத்துடன் சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். கரும்புகையை கக்கியவாறு கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீவிபத்து நிகழ்ந்திருக்கிறது. 

தீயிலிருந்து எழுந்த அடர்த்தியான, கருப்புப் புகை வானம் முழுவதும் பரவியதால், போர்ட் ஆர்தரின் மேற்குப் பகுதிக்கு மக்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சரியாக 6.30 மணிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், முதற்கட்டமாக உள்ளே இருந்த தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: “ஓட்டு போடப்போற பொண்ணே கலங்கி நிக்காத...” - பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்... அனல் தெறிக்க பேச்சு...!

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு, அருகிலுள்ள வீடுகளை உலுக்கிய ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த வெடிப்பு ஒரு “தொழில்துறை ஹீட்டருடன்” தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஷெரிஃப் ஸீனா ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார். வெடிப்பு மற்றும் தீயின் தீவிரத்தைக் காட்டும் பல காணொளிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

Following reports of an explosion, a massive fire can be seen at the Valero oil refinery in Port Arthur, Texas. pic.twitter.com/I3UYBTS41A

— OSINTdefender (@sentdefender) March 24, 2026

இதையும் படிங்க: நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட உதயநிதியின் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு... சிக்கியது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share