×
 
☰

இந்திய தொழிலதிபர் சுனில் மிட்டலுக்கு உயரிய 'செவாலியே' விருது!! கௌரவித்த பிரான்ஸ்..!!

விருதுச் சின்னம் அக்டோபர் 28ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

பிரெஞ்சு குடியரசின் மிக உயரிய குடிமை விருதான ‘லீஜியன் ஆஃப் ஹானர்’ (Ordre national de la Légion d’Honneur) விருதின் செவாலியே (Chevalier) பட்டத்தை பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மிட்டலுக்கு பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வழங்கி உள்ளார். 1802ஆம் ஆண்டு நெப்போலியன் போனபார்ட்டால் நிறுவப்பட்ட இந்த விருது, பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய சிறப்பு விருதாகக் கருதப்படுகிறது. இது ஐந்து நிலைகளைக் கொண்டது; அதில் செவாலியே என்பது ஆரம்ப நிலைப் பட்டமாகும்.

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதில் மிட்டலின் நீண்டகால பங்களிப்பு, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறைகளில் அவர் ஆற்றிய சிறப்பான பணிகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுச் சின்னம் அக்டோபர் 28ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

1992ஆம் ஆண்டு ஏர்டெல் தொடங்கப்பட்டபோது, பிரெஞ்சு நிறுவனமான காம்ப்ஞி ஜெனரல் டெஸ் யூ (Compagnie Générale des Eaux) பார்தியுடன் இணைந்து இந்தியாவில் மொபைல் தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியதிலிருந்தே மிட்டல் பிரான்சின் நண்பராக இருந்து வருகிறார். தற்போது அவர் ஐரோப்பிய செயற்கைக்கோள் நிறுவனமான யூடெல்சாட்டின் (Eutelsat) இணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க: தொடரும் மாணவர்கள் போராட்டம்..!! கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீஸ்..!! உச்சக்கட்ட பதற்றத்தில் பிரான்ஸ்..!!

இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் தியரி மத்தூ, “சுனில் பார்தி மிட்டல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சின் நண்பராக இருந்து வருகிறார். விண்வெளி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் இரு நாடுகளும் இணைந்து முன்னேறும் இக்காலத்தில் அவரது பங்கு மிக முக்கியமானது” என்று பாராட்டியுள்ளார்.

மிட்டல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, “இந்த விருதைப் பெற்றதில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். இந்தியா-பிரான்ஸ் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் பொறுப்புடன் இதை ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பார்தி ஏர்டெல் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் சேவை நிறுவனமாக விளங்குகிறது. 2007இல் பத்ம பூஷன் விருதும், 2024இல் பிரிட்டிஷ் அரசர் சார்லஸ் மூன்றாமிடமிருந்து கெளரவ நைட் கமாண்டர் (KBE) பட்டமும் பெற்ற முதல் இந்தியக் குடிமகன் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இதற்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த கலை இயக்குநர் தோட்டா தரணி, நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் செவாலியே பட்டம் பெற்றுள்ளனர். இசைக்கலைஞர் அருணா சாயிராம், பதிப்பாளர் கண்ணன் சுந்தரம், சமூக ஆர்வலர் அஞ்சலி கோபாலன் ஆகியோரும் இந்தப் பெருமையைப் பெற்றவர்கள்.

இதையும் படிங்க: தொடரும் மாணவர்கள் போராட்டம்..!! கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீஸ்..!! உச்சக்கட்ட பதற்றத்தில் பிரான்ஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share