உங்களால நடுத்தெருவுல நிக்குறேன்! ட்ரம்புக்கு போன் போட்டு கதறிய பிரான்ஸ் அதிபர்!
இமானுவேல் மேக்ரான் தொடர்ந்து ஜாலியாக நியூயார்க் வீதியில் நடையை போட்டார். வந்திருப்பது பிரான்ஸ் அதிபர் என்பதை தெரிந்து கொண்ட மக்கள், ஆர்வமுடன் வந்து பேசினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வருகை தந்தார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசிய பிறகு, நியூயார்க்கில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு ஓய்வெடுக்கச் சென்றார். ஆனால், அவரது பயணத்தின்போது ஒரு எதிர்பாராத நிகழ்வு அரங்கேறியது, அது உலகின் கவனத்தை ஈர்த்தது.
மேக்ரான் பயணித்த கார், பிரான்ஸ் அதிகாரிகளின் காருடன் நியூயார்க் நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதில் மேக்ரானின் காரும் அடங்கும். இதனால் ஆச்சரியமடைந்த மேக்ரான், காரில் காத்திருப்பதற்கு பதிலாக, வெளியே இறங்கி வந்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியிடம், “எதற்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன?” என்று கேட்டார். அதற்கு அந்த அதிகாரி, “சாரி பிரசிடென்ட், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வழியாகச் செல்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன,” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது! ஆப்கானுக்கு ஆதரவாக களமிறங்கிய இந்தியா!
இதைக் கேட்ட மேக்ரான், எந்தவித அசௌகரியமும் காட்டாமல், திடீரென நியூயார்க் வீதியில் நடக்கத் தொடங்கினார். எந்தப் பாதுகாப்பு அதிகாரியையும் உடன் அழைத்துச் செல்லவில்லை. மக்களிடையே எளிமையாகக் கலந்தார். இந்தத் தருணத்தில், அவர் தனது தொலைபேசியை எடுத்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்தார். “என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியுமா? உங்கள் பயணத்திற்காக எல்லாவற்றையும் நிறுத்திவிட்டார்கள். நான் இப்போது நடு ரோட்டில் நிற்கிறேன்,” என்று ஜாலியாகப் பேசி, புன்னகையுடன் தொலைபேசியை வைத்தார்.
தொடர்ந்து, மேக்ரான் நியூயார்க் வீதிகளில் உலா வந்தார். அவரை அடையாளம் கண்ட மக்கள் ஆர்வத்துடன் அருகில் வந்து பேசினர். பலர் அவருடன் செல்ஃபி எடுத்தனர், சிலர் கட்டித் தழுவி முத்தமிட்டனர். இவை அனைத்தையும் மேக்ரான் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். இந்தக் காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் தீயெனப் பரவியது.
இந்த நிகழ்வுக்கு முன், ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் மேக்ரான் முக்கியமான உரையாற்றினார். அவர், பாலஸ்தீனத்திற்கு சுதந்திர நாடு என்ற அந்தஸ்து வழங்கப்படுவதை ஆதரிப்பதாக அறிவித்தார். இது, இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. இந்த அரசியல் பின்னணியில், மேக்ரானின் எளிமையான நடவடிக்கை மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
“மனுஷன் எவ்வளவு எளிமையாக இருக்கார்!” என்று அமெரிக்க மக்களே வியந்து புகழ்ந்தனர். பிரான்ஸ் அதிபரின் இந்த மக்கள் தொடர்பு, அவரது எளிமையையும், மக்களோடு மக்களாகப் பழகும் தன்மையையும் உலகுக்கு எடுத்துக்காட்டியது.
இதையும் படிங்க: கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் 2வது நாளாக தொடரும் ரெய்டு... சிக்கியதா முக்கிய ஆவணங்கள்?