×
 

நிதி மோசடி வழக்கு... தேவநாதன் யாதவிற்கு இடைக்கால ஜாமீன்! ஹைகோர்ட் தடாலடி உத்தரவு

நிதி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த தேவநாதன் யாதவிற்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.

இந்த நிலையில், தேவநாதன் யாதவ், குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிதி நிறுவனத்துக்கு எதிராக சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பணபலம் மற்றும் அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால் ஜாமீன் கொடுத்தால் மக்களுக்கு பணம் கிடைக்காது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி கூறினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், இந்த வழக்கின் விசாரணைக்கு தேவநாதன் யாதவ் உள்ளிட்ட மனுதாரர்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் தேவநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: #BREAKING: பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி… ஐகோர்ட் உத்தரவு

 வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்ற காவல்துறை என் வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்தார். நிதி மோசடி வழக்கில் கைதாகி உள்ள தேவநாதன் யாதவியின் அனைத்து சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆறு வார காலம் இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என ஏற்கெனவே தேவநாதன் யாதவியின் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தேவநாதன் யாதவிற்கு இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டுக்கு மேல் சிறையில் இருப்பதால் அக்டோபர் 30-ம் தேதி வரை நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுவதாகவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது. மேலும் 100 கோடி ரூபாயை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அக்டோபர் 31ஆம் தேதி டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: காஞ்சிபுரம் DSP-ன் கைது ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share