நெடுஞ்சாலையில் வெடித்துச் சிதறிய கேஸ் டேங்கர் லாரி... 8 பேர் உடல் கருகி பலி; 90 பேரின் நிலை என்ன?
மெக்சிகோவில் எரிவாயு டேங்கர் லாரி கசிந்து வெடித்த விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மெக்சிகோவில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. நேற்று மதியம் நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்து ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக மிகப்பெரிய வெடி விபத்து நிகழ்ந்தது. தலைநகரின் அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரமான இஸ்டபலபாவில் நடந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் 19 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் டேங்கரில் சுமார் 20,000 லிட்டர் (5,300 கேலன்) எரிபொருள் இருந்ததாக கூறப்படுகிறது.
பரபரப்பான சாலையில் எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதன்பின் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதையும் படிங்க: இனி ஆன்லைனில் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்! தமிழக அரசின் புதிய திட்டம்...
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதன் பின் மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: டெல்லியில் முகாமிட்ட பாஜக தலைகள்! அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங்... என்னவாம்?