×
 

தயவு செஞ்சி வராதீங்க... அன்புமணி தலையில் இடியை இறங்கிய ஜி.கே.மணி...! 

ராமதாஸை சந்திக்க யாரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வர வேண்டாம் என ஜி.கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார்.  இந்த மருத்துவ பரிசோதனையில் இப்பொழுது உடல்நலம் சரியாக இருக்கிறது. நல்லா இருக்காரு, எந்த தொந்தரவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஒரு 12 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உங்களுக்கு எல்லாம் தெரியும், அதற்கு பிறகு தொடர்ந்து மாதந்தோறும் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்கு இடையில் சற்று லேசான பிரச்சனை இருப்பதாக அறிந்த உடனேயே நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்களும் வந்து பார்த்தோம். அவருக்கு முழுமையான இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆஞ்சியோகிராம் அறிக்கை நன்றாக உள்ளது. ராமதாஸுக்கு ஒரு நொந்தரவும் கிடையாது. நன்றாக பேசுகிறார், முழு உடல் நலத்துடன் இருக்கிறார்.  நாளை ராமதாஸ் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம். நான் பொதுமக்களுக்கும், பாமகவினருக்கும் ஒரு அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

தயவு செய்து யாரும் ராமதாஸை பார்ப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு வர வேண்டாம். மருத்துவமனையில் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் அவரை பார்ப்பதில் நிறைய இடையூறுகள் இருக்கும். அனைவரும் தைரியமாக இருங்கள், அவரை பார்க்க யாரும் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதையும் படிங்க: விஜயால் வந்த வினை... அன்புமணிக்கு அனுமதி மறுப்பு... பாமகவிற்கு பேரதிர்ச்சி கொடுத்த காவல்துறை...!

தொடர்ந்து ராமதாஸ் அன்புமணியைச் சந்திக்க அனுமதி கேட்டாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜி.கே.மணி, ராமதாஸ் அவர்கள் அதிகாலையிலேயே பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு விட்டதாகவும், அன்புமணி வந்து சென்றது தொடர்பாக தனக்கு பிறகே தெரியும் என்றும் கூறினார். தற்போது தான் அவரை அறைக்கு மாற்றியுள்ளனர். காலையில் இருந்து அவருடன் தான் இருந்து வருகிறேன். அவரிடம் சொல்லிவிட்டு தான் பேட்டியளிக்க வந்தேன். “நான் நலமாக இருக்கிறேன் என சொல்லிவிடுங்கள் மணி” என ராமதாஸ் என்னிடம் சொல்லி அனுப்பினார் எனக்கூறினார். 

இதையும் படிங்க: அப்பாவை பார்க்க முடியாமல் திரும்பிய அன்புமணி... ராமதாஸ் நிலை குறித்து வெளியிட்ட பரபரப்பு தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share