×
 

அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே.... காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்...இந்த வருஷம் தீம் என்ன தெரியுமா?

2026 காதலர் தினத்திற்கான சிறப்பு கூகிள் டூடுல், அன்பை வெளிப்படுத்த கையால் செய்யப்பட்ட பரிசுகள் மற்றும் விருந்துகளை பரிமாறிக்கொள்ளும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது.

உலக அளவில் இன்று (பிப்ரவரி,14-ம் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் என்ற உணர்வு பரவசமூட்டும் ஒன்றாக இருந்து வருகிறது. ரத்த சொந்தம் அல்லாமல் இரு வெவ்வேறு உலகில் வளர்ந்து வாழ்ந்தவர்களிடையே உருவாகும் ஓர் உணர்வு. காதலில் திளைத்திருப்பது என்பது மகிழ்ச்சியானது. இருப்பினும், காதல் என்பது மரியாதை, சுதந்திரம், வளர்தல், புரிதல், உரையாடல் ஆகியவைகளும் அதில் அடங்கும். காதலர்கள் பூங்கொத்து, க்ரீட்டிங் கார்டு, நேரம்  சாக்லெட், பரிசு பொருட்கள் என கொடுத்து காதலர் தினத்தை கொண்டாடலாம்.

பூக்கள், பரிசுகள், அட்டைகள் மற்றும் சாக்லேட்டுகளை வழங்குவதைத் தவிர, சில காதலர்கள் புதிய மற்றும் புதுமையான வழிகளை விரும்புகிறார்கள். அவர்கள் இந்த நாளை என்றென்றும் மறக்கமுடியாததாக ஆக்குகிறார்கள். அவர்களுக்காக கூகுள் ஸ்பெஷலான ஐடியாவுடன் தனது டூடுலை வெளியிட்டுள்ளது. 

கூகிள் டூடுல் கையால் செய்யப்பட்ட பரிசுகள், தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் சுவையான விருந்துகளைக் கொண்ட கலைப்படைப்புடன் பரிசுகளை வழங்குவதன் காதல் மொழியைக் கொண்டாடுகிறது.

இதையும் படிங்க: ரோஜா.. ரோஜா..!! நாளை காதலர் தினம்..!! ரோஜா பூங்கொத்துகளுக்கு எகிறும் டிமாண்ட்..!! விலை அதிகரிப்பு..!!

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இன்றைய டூடுல், காதலர் தினத்தை முன்னிட்டு கையால் செய்யப்படும் பரிசுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. மனப்பூர்வமாக கடிதம் எழுதுதல், வீட்டிலேயே கேக் பேக் செய்தல், அல்லது ஸ்பெஷலான உணவை தயார் செய்தல் போன்ற செயல்கள் மூலம் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவது இந்த டூடுலின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. நாம் நேசிக்கும் உறவுகளை நினைத்து மகிழும் இந்த நாளை, அன்புடன் கொண்டாட வேண்டும் என்ற செய்தியையும் இந்த டூடில் வெளிப்படுத்துகிறது.

இந்த சிறப்பு டூடுல் இங்கிலாந்து, இந்தியா, பின்லாந்து, மெக்ஸிகோ, கொலம்பியா, ஈக்வடார், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், சீனா, ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து, உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பல மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: VALENTINE SPECIAL: இன்று TEDDY DAY..!! ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share