×
 

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த அவலம்... கை, கால்கள் உடைந்து மரணித்த கொடுமை...!

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் கை,கால் முறிந்ததோடு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்

குமரி மாவட்டம்  ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வினோத்.இவர் மணைவி மோனிஷா என்பவர் குழந்தை பிரவசத்திற்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையின் கை, கால் முறிவு  ஏற்பட்டுள்ளதோடு உடலில் காயங்களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தந்தை தன் மணைவிக்கு கரு உறுவானது முதல், முறையாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

தொடர்ந்து ஸ்கேன் பரிசோதனையும் செய்து அதற்குறிய முடிவுகளில் குழந்தை நன்றாக இருக்கிறது என பூதப்பாண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் கூறிய நிலையில் தற்பொழுது குழந்தையில் கை,கால் உடைந்துள்ளது என கூறுவதை ஏற்க முடியாது என்றும், பிரசவத்தின் போது மருத்துவர் அலட்சியமாக நடந்து கொண்டதே காரணம் என குற்றம் சாட்டியதோடு  பெண்ணின் கணவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

இந்நிலையில்  மேல் சிகிச்சைக்காக நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று குழந்தை  இறந்தது.குழந்தை இறப்பிற்கு பூதப்பாண்டி அரசு மருமத்துவமனையில் பிரசவம் பார்த்த மருவத்துவரின் அலட்சியமே காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு வழக்கு பதிவு செய்ய வேண்டும் குழந்தையின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: இப்ப வாங்கடா.. மோதி பாக்கலாம்..!! சீனாவில் கோலாகலமாக தொடங்கியது ரோபோட் ஒலிம்பிக்ஸ்..!!

இறந்த குழந்தையை உடற்கூர் ஆய்வு செய்து அதன் முடிவு தெரிவிக்க வேண்டும் என்றும், இது தங்கள் குழந்தை தான் என DNA சோதனை மூலமாக உறுதிப்படுத்த வேண்டும் அது வரை இறந்த குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என கோரி குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய போலிஸார் பேச்சுவார்த்தை  நடத்தினார்கள்.ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 
 

இதையும் படிங்க: பிரம்மாண்டமாக நடைபெறப்போகும் தவெக மாநில மாநாடு.. ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share