×
 

எஸ்.எம்.எஸ். மூலம் வந்த அதிபயங்கர எச்சரிக்கை... உயிர் பயத்துடன் கூட்டம், கூட்டமாக ஓட்டம் பிடிக்கும் மக்கள்... பரபரப்பு வீடியோ...!

சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், ஓஹு மற்றும் ஹொனலுலு நகர மையத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவிற்கு அருகே 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஜப்பான், அமெரிக்காவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. ஹவாயில் ஆயிரக்கணக்கான மக்கள் கடலோரப் பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் ஓஹு மற்றும் ஹொனலுலுவில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. 

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஹவாயின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அவசர, அவசரமாக பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர். சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், ஓஹு மற்றும் ஹொனலுலு நகர மையத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கார்கள் சாரை, சாரையாய் வரிசைக் கட்டி நிற்பதையும், எறும்பு வேகத்தில் ஊர்ந்து செல்வதும் அந்த வீடியோக்களில் இடம் பெற்றுள்ளன. 

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின்படி, சுனாமி ஏற்பட்டால், ஹவாயில் முதல் அலை எழும்பும் ஆரம்பகால வருகை நேரம் உள்ளூர் நேரப்படி மாலை 7:17 மணிஎன அறிவிக்கப்பட்டது. மேலும் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள்  விழிப்புடன் இருக்கவும், வெளியேற்ற உத்தரவுகளைப் பின்பற்றவும் குறுஞ்செய்திகள் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: கீழடியை வெச்சு அரசியல் பண்றாங்க... PERMISSION வாங்க வேண்டியது திமுக அரசு கடமை - இபிஎஸ்

இதனையடுத்து ஓஹுவில், கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறினர். ஒவ்வொரு கடற்கரையிலும் சேதம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதால், ஹோனலுலு நகரின் மையப்பகுதியிலும், மௌயின் சில பகுதிகளிலும் மற்றும் பிற இடங்களிலும் சைரன்கள் மற்றும் அவசர குறுஞ்செய்திகள் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி எச்சரிக்கை பரப்பப்பட்டது. 

ஹவாயின் பெரிய தீவில் வசிக்கும் மக்கள் சக்திவாய்ந்த அலைகள் மற்றும் வலுவான நீரோட்டங்கள் காரணமாக கடலோரப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் வந்தன.  இதையடுத்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, கையில் கிடைத்த உடமைகளுடன் மக்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறி வருகின்றனர். 

ஹவாய்க்கு மட்டுமின்றி,  லாஸ் ஏஞ்சல்ஸ், சான் டியாகோ, சியாட்டில் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்கள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு கடற்கரை, கனடா, ஜப்பானின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரைகளில் தொடங்கி டோக்கியோ வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ட்ரம்ப் வார்னிங்கை மதிக்காத புதின்.. உக்ரைன் சிறை மீதான தாக்குதலில் 22 பேர் பலி..

Here’s a few looking west. Insane amount of traffic trying to get to higher ground. #hawaii #tsunami #TsunamiWatch pic.twitter.com/ukgqJySHpm

— blics (@blics) July 30, 2025

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share