×
 

இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை!! நெல்லையில் 168 மி.மீட்டரில் கனமழை பதிவு!

கடந்த 24 மணி நேரத்தில் நெல்லையில் ஊத்து பகுதியில் 168 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 168 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது மிகப் பெரிய அளவாகும்.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் பல இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. நாலு முக்கு பகுதியில் 158 மி.மீ., கக்கச்சி பகுதியில் 142 மி.மீ., மாஞ்சோலை பகுதியில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 93 மி.மீ., போடிநாயக்கனூரில் 86.2 மி.மீ., கருப்பாநதி அணையில் 79 மி.மீ., குலசேகரபட்டினத்தில் 70 மி.மீ., செங்கோட்டையில் 70 மி.மீ., சாத்தான்குளத்தில் 69 மி.மீ. மழை பெய்துள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் 63.6 மி.மீ., குண்டாறு அணையில் 62 மி.மீ., காரைக்குடியில் 55 மி.மீ., பூதலூரில் 52 மி.மீ., திருச்செங்கோட்டில் 51 மி.மீ., மேட்டுப்பாளையத்தில் 48 மி.மீ. உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

வெம்பக்கோட்டை 47.6 மி.மீ., மாம்பழத்துறை ஆறு 46.4 மி.மீ., தென்காசி 42.2 மி.மீ., அடவிநாயினார் கோவில் அணை 42 மி.மீ., குறிஞ்சிப்பாடி 42 மி.மீ. என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

இந்தக் கனமழை காரணமாக சிறு நீர் நிலைகள் நிரம்பி வழியும் அபாயம் உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், சில பகுதிகளில் வெள்ள அபாயத்துக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை தொடரும் என எச்சரித்துள்ளது.

மக்கள் உஷாருடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share