×
 

ஹோர்மூஸ் நீரிணையில் மிகப்பெரிய செக்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி...!

துறைமுகங்களை முற்றுகையிடுவதை அமெரிக்க படைகள் கைவிடும் வரை ஹோர்முஸ் நீரிணையை திறக்க போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

ஹோர்மூஸ் நீரணையில் கன்னிவெடிகளை புதைக்கும் ஈரானின் சிறிய படகுகளை சுட்டு வீழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில் இரண்டு கப்பல்களை ஈரான் சிறைபிடித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒரு மாதத்திற்கு மேலாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில் துறைமுகங்களை முற்றுகையிடுவதை அமெரிக்க படைகள் கைவிடும் வரை ஹோர்முஸ் நீரிணையை திறக்க போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

இதையடுத்து ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுகட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ள ட்ரம்ப் தங்கள் அனுமதியின்று எந்த கப்பலும் ஹோர்மஸ் நீரணை பகுதியில் நுழையவோ வெளியேறவோ முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் ஹோர்மூஸ் நீரணையில் கன்னிவெடிகளை புதைக்கும் சிறிய படகுகளை கூட சுட்டு வீழ்த்த அமெரிக்க படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரண்டு கப்பல்களை சிறைபிடித்துள்ளதாக அறிவித்துள்ள ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் அந்த கப்பல்களின் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர். 

ஹோர்முஸ் நீரிணை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் இரண்டு கப்பல்களை ஈரான் சிறைபிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடலில் கன்னிவெடிகளை வைக்கவும், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவும் ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட நவீனரக படகுகளை நிறுத்தி வைத்திருக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: வாயை மூடு ட்ரம்ப்! அமெரிக்க அதிபரை கிண்டலடிக்கும் ஈரான்!! ஏஐ வீடியோ வைரல்!

இதனிடையே ஈரான் தலைநகர் தெஹரானில் தொடர்ந்து கேட்ட வெடிச்சத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதை எடுத்து உடனடியாக வான் பாதுகாப்பு கருவிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஈரான் அரசு  ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்தியர்கள் ஈரான் செல்வதை தவிர்க்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 

இதையும் படிங்க: மேற்குவங்க வரலாற்றில் புதிய நல்லாட்சி சகாப்தத்தின் துவக்கம்!! அதிகமான ஓட்டுப்பதிவு குறித்து அமித் ஷா பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share