×
 

உச்சக்கட்ட போர் பதற்றம்... உடனே போனை செக் பண்ணுங்க... HPCL வெளியிட்ட முக்கிய மெசெஜ்...!

நாட்டில் தேவைக்கு அதிகமான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள செய்திகளுக்கு ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்திருக்கிறது. குறுஞ்செய்தி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. 

 போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது. நாடு முழுவதும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் அனைத்தும் வதந்தி இதை நம்ப வேண்டாம் என்றும், நாட்டில் தேவைக்கு அதிகமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அந்த குறுஞ்செய்தியிலே சொல்லப்பட்டிருக்கின்றது. 

இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானும் அமெரிக்க தளங்களைத் தாக்கி வருகிறது. இந்த சூழலில், நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படும் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: #BREAKING தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? - எண்ணெய் நிறுவனங்களுக்கு உடனே பறந்த உத்தரவு...!

இந்தியாவைப் பொறுத்தவரை வடமாநிலங்களில் எரிபொருள் மற்றும் சமையல் பயன்பாடு எல்பிஜி சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதை கள்ள சுந்தையில் 1500 ரூபாய் கொடுத்து வாங்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் காணொலியானது வைரலான நிலையில், தற்போது இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது. அந்த விளக்கத்திலே தான் நாட்டில் தேவைக்கு அதிகமான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் போதுமான அளவு எரிபொருட்களும் எல்பிஜி சிலிண்டரும் கையிருப்பில் இருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் ஏற்படுவதன் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்ய காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதாவது கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கின்றது போன்ற காரணங்களால் எரிவாயு சிலிண்டர்கள் மத்திய கிழக்கில் இருந்து இந்தியா வந்தடைய சில பாதிப்புகள் ஏற்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக கையிருப்பில் இல்லாத நிலை என்பது இந்தியாவிலே கிடையாது. போதுமான அளவிற்கு தேவைக்கு அதிகமான அளவிற்கும்  எல்பிஜி சிலிண்டர்கள் இருப்பு இருப்பதாகவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

இதையும் படிங்க: காலையில் இடியாய் இறங்கிய செய்தி... இவங்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடையாது... தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share