×
 

தீவிரவாத தலைமையகங்களை தகர்த்த இந்தியா! ஜெய்ஹிந்த்.. நீதி நிலைநாட்டப்பட்டதாக பூரிப்பு..!

பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான முஷரபாபாத், பஹவல்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்திய ராணுவம் கூறி வைத்து தாக்குதல் நடத்தியது. ஆப்ரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகளின் ஒன்பது எல்லைகள் குறி வைத்து தாக்கப்பட்டன.

இதில், 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 55 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இறங்கி அடிக்கும் இந்திய ராணுவம் "ஆப்ரேஷன் சிந்தூர்"! அதிகாலையே அதிரடி பாய்ச்சல்...

மேலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு பாகிஸ்தானின் முக்கிய விமான நிலையங்களான லாக்கூர், சியால்கோட் விமான நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகளை கொண்டு இந்திய ராணுவத்தினர் நடத்திய இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. 

 

 

மேலும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இது போன்ற மோதலை ஏற்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை கூறி உள்ள நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, யூஏஇ, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இந்தியா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இதனுடைய காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி  கொடுத்துள்ள இந்த நிகழ்வு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க: காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்..! 3 வீரர்கள் உயிரிழந்த சோகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share