×
 

இதுக்கும் தடையா..? அடி மேல் அடி கொடுக்கும் இந்தியா.. திணறும் பாகிஸ்தான்..!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்கத் தடை விதித்துள்ளது மத்திய அரசு.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக, பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்கத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ராஜாங்க ரீதியாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தூதர உறவுகளை துண்டித்தது, எல்லைகளை மூடியது, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது, அனைத்து விசாக்களையும் ரத்து செய்தது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தத் தடை விதித்தது.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழுசுதந்திரம் அளித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அடுத்த நடவடிக்கையாக இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தானில் இருந்து வரும் எந்த விமானமும் பறக்கத் தடைவிதித்துள்ளது மத்திய அரசு.

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 48 சுற்றுலாத் தளங்கள் மூடல்..!

சர்வதேச விமானிகளுக்கு விடுத்துள்ள செய்தியில் “பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பாகிஸ்தானிலிரிருந்து வரும் விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழையக்கூடாது” எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தான் விமான ஆணையம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் வடபகுதி வழியாக செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால், “ கில்ஜித், கார்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடபகுதி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் இயக்கப்படாது” எனத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் வெளியியிட்ட செய்தியில் “பாகிஸ்தானின் கராச்சி, லாகூரிலிருந்து கார்து நகருக்கு செல்ல இருந்து இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்திலிருந்து ஸ்கார்து, கில்ஜித் நகருக்குச் செல்ல இருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவுடன் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது வான்வெளிய உன்னிப்பாக கவனித்து வருகிறது, பாதுகாப்பையும் எல்லையில் பலப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த நேரத்தில் இரு நாடுகளுமே வான்வெளியே பயன்படுத்துவது சரியல்ல என்பதால்தான் முன்னெச்சரிக்கையாக நிறுத்தினோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இனிமேல் இப்படி நடக்கக்கூடாது! பஹல்காம் தாக்குதலுக்கு 'AK' கண்டனம்.. விருது பெற்ற கையோடு அஜித் அட்வைஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share