எங்களை சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம்!! மீண்டும் இந்தியாவை வம்பிழுக்கும் அசிம் முனீர்!
''இந்தியா எங்களை சீண்டினால் நாங்கள் முன்பு போல சும்மா இருக்க மாட்டோம்,'' என, பாகிஸ்தானின் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்ற அசிம் முனீர் பேசி உள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராணுவத் தலைவர் அசிம் முனீரை அந்நாட்டு அரசு புதிதாக உருவாக்கிய முப்படை தலைமை தளபதி (Chief of Defence Forces - CDF) பதவிக்கு நியமித்துள்ளது. இந்தப் புதிய பதவியில் அவர் முதல் முறையாக ஆற்றிய உரையில், மீண்டும் இந்தியாவை வம்பிழுத்து பேசி உள்ளார்.
“இந்தியா எங்களை சீண்டினால், நாங்கள் முன்பு போல சும்மா இருக்க மாட்டோம். அடுத்த தடவை பதில் இன்னும் வேகமாகவும், கடுமையாகவும், தீவிரமாகவும் இருக்கும்” என்று இந்தியாவை நேரடியாக அச்சுறுத்தியுள்ளார். இந்த அச்சுறுத்தல், ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ போன்ற பழைய சம்பவங்களை நினைவூட்டி, இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.
அசிம் முனீர் யார்? 2022 நவம்பரில் பாகிஸ்தான் ராணுவத் தலைவராக பதவியேற்றவர், இந்தியாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர். ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ – 2025 மே மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கை – அவரது ‘காமெடி’ பேச்சுக்கு உதாரணம்.
இதையும் படிங்க: வார்னிங்!! இந்தியாவை சிதைக்க திட்டமிடும் அசிம் முனீர்! போரை துவங்க திட்டம்!! வெளியான முக்கிய் தகவல்!
அப்போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அவர் பெருமையுடன் சொன்னார், ஆனால் அது முழுக்க முழுக்கப் பொய்யாக நிரூபிக்கப்பட்டது. இப்போது பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் 27வது திருத்தத்தால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய CDF பதவி, அவருக்கு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் அதிகாரத்தையும், அணு ஆயுத அமைப்புகளை கட்டுப்படட்டும் அதிகாரத்தையும் அளித்துள்ளது. இதனால் அவர் பாகிஸ்தானின் ‘மிகப் பெரிய ராணுவ அதிகாரி’ ஆக மாறியுள்ளார்.
புதன்கிழமை (டிசம்பர் 8) பாகிஸ்தானின் புதிய பாதுகாப்பு படைகள் தலைமை அலுவலகம் (Defence Forces Headquarters - DFHQ) திறப்பு விழாவில் அசிம் முனீர் ஆற்றிய உரை, வரலாற்று சிறப்புடையதாக அமைந்தது. ராணுவத் தலைவர் ஜெனரல் சஹிர் ஷம்ஷாத் மிர்ஸா ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட தாமதத்துக்குப் பிறகு அவர் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். விழாவில் விமானப்படைத் தலைவர் ஜாஹிர் அகமது பாபர் சிட்ஹு, கடற்படைத் தலைவர் நவீத் அஷ்ரஃப் உள்ளிட்ட மூன்று படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவரது உரையில் அசிம் முனீர் சொன்ன முக்கிய விஷயங்கள்: “பாகிஸ்தான் என்ற கருத்தே அழியாதது. நமது நம்பிக்கையான போர்வீரர்களாலும், ஒன்றிணைந்த தேசத்தின் உறுதியான தீர்மானத்தாலும் பாதுகாக்கப்படுகிறது. வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களையும் மாற்றங்களையும் கருதி, முப்படைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது இன்றைய தேவை. போர்க்களம் இப்போது நவீனமாக மாறியுள்ளது. எனவே, புதிய தேவைகளுக்கு ஏற்ப நம் படைகள் மாற வேண்டும்.”
இதோடு, இந்தியாவை நேரடியாகக் குறிவைத்து, “இந்தியா தன்னை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. எந்த ஆக்கிரமிப்பு நடந்தாலும், பாகிஸ்தானின் பதில் முன்பை விட வேகமாகவும், கடுமையாகவும், தீவிரமாகவும் இருக்கும்” என்று எச்சரித்தார்.
இதோடு அவர் ஆப்கானிஸ்தான் பக்கமும் தனது பேச்சை திருப்பினார். தலிபான் அரசிடம், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். “தலிபான் ஆப்கானிஸ்தானில் TTP-ஐ பயன்படுத்தி பாகிஸ்தானை தாக்க வேண்டிய முடிவை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்தப் பேச்சு, பாகிஸ்தானின் உள் பிரச்னைகளை மறைக்க இந்தியாவை இலக்காக்கும் பழைய உத்தியை ஒத்திருப்பதாக இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஏற்கனவே பதற்றமான நிலையில் உள்ளன. ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ போன்ற நிகழ்வுகள் இன்னும் புதிதாக இருக்கும் போது, அசிம் முனீரின் இந்த ‘அணு அச்சுறுத்தல்’ போன்ற பேச்சு எல்லைப் பாதுகாப்பை மேலும் சவால் விடுகிறது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்! இந்தியாவை ஆயுத சோதனைக்கு பயன்படுத்திய சீனா! அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!