இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!
பார்கவஸ்திரா என்ற புதிய உள்நாட்டு ஆன்ட்டி ட்ரோன் தடுப்பு வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. கடந்த 8 ஆம் தேதி இரவு தொடங்கிய பாகிஸ்தானின் தாக்குதல் மறுநாள் அதிகாலை வரை நீடித்தது. இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனிடையே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மோதலில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. இதற்கிடையே இந்தியா இப்போது பார்கவஸ்திரா என்ற புதிய உள்நாட்டு ஆன்ட்டி ட்ரோன் தடுப்பு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு கொடுத்த வார்னிங்... அனைவருக்கு அனுப்பப்பட்ட திடீர் மெசேஜ்... என்னாவா இருக்கும்?
குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ஆன்ட்டி ட்ரோன், ஒடிசாவின் கோபால்பூரில் உள்ள கடல்வழி பயரிங் ரேஞ்ச் மையத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதை சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (SDAL) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. எதிரிகள் ட்ரோன்களை கூட்டமாக அனுப்பினாலும் அதைக் குறிவைத்து காலி செய்யும் வகையில் இந்த ட்ரோன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் கூட இந்த முறையைப் பயன்படுத்தியே இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றது.
இருப்பினும், இந்தியப் படைகள் தகுந்த பதிலடி கொடுத்தது எல்லைப் பகுதிகளை நோக்கி வந்த அனைத்து ட்ரோன்களையும் இந்தியா சூட்டு வீழ்த்தியிருந்தது. வான் பாதுகாப்பு அமைப்பில் இந்தியா மிக வலிமையாக இருப்பதையே இது காட்டுகிறது. இந்தச் சூழலில் தான் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், பார்கவஸ்திரா உள்நாட்டு ஆன்ட்டி ட்ரோன் அமைப்பை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த சோதனையின் போது ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் பார்கவஸ்திரா வெற்றிகரமாகத் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப்பிரதேசம்.. சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு..!