தீவிரவாத நடவடிக்கை எதிர்ப்பு..! இந்தியா - பாக். இடையிலான பேச்சுவார்த்தை தொடக்கம்..!
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியது.
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான், இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வந்தது. இந்தியாவின் தாக்குதலால் பெரும் இழப்புகளை சந்தித்து வந்த பாகிஸ்தான் போர்க்களத்தை தணிக்க கோரிக்கை விடுத்தது. இதனை எடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் போர் நிறுத்தம் ஏற்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போர் பதற்றத்தில் மூடப்பட்ட விமான நிலையங்கள்..! முன்கூட்டியே திறக்க அதிரடி உத்தரவு..!
பகல்காம் தாக்குதலை அடுத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாதிகள் அழிதொழிக்கப்பட்டனர்.இந்த நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளான இயக்குனர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! மிக முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதம்..!