×
 

7 பில்லியன் டாலரைப் பார்த்ததும் ‘ஈஈஈஈ’ என இளித்த பாகிஸ்தான்... எச்சரித்த இந்தியா!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்ததையடுத்து 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரே பட்டியலில் இருந்து நீக்கியது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவைத் தடுக்க பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நிதியை நிறுத்த இரண்டு வழிகளில் இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானை நிதி நடவடிக்கை பணிக்குழுவின்(FATF) கிரே லிஸ்ட்டில் மீண்டும் சேர்க்க இந்தியா தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.  உலகளாவிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான FATF 2018ம் ஆண்டு பாகிஸ்தானை கிரே லிஸ்டில் சேர்த்தது.

ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்ததையடுத்து 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரே பட்டியலில் இருந்து நீக்கியது. மீண்டும் இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து FATF-யிடம் முறையிடும் பட்சத்தில் அந்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நாட்டிற்கான மூலதன வரவுகள் முற்றிலும் முடங்கிப்போகும். 

+

இரண்டாவதாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு வழங்கிய 7 பில்லியன் டாலர்களை வைத்து அந்நாடு பயங்கரவாத அமைப்புகளை சப்போர்ட் செய்வதாக இந்தியா கவலை தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஐசியூவில் கிடக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் 7 பில்லியன் டாலர்களை வாரி வழங்கியது. ஒருவேளை பாகிஸ்தான் குறித்து இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் முறையிடும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கான நிதி சப்போர்ட் ஒட்டுமொத்தமாக முடக்கப்படும். ஏற்கனவே பாகிஸ்தான் பங்குச்சந்தை பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த நாடும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்ததோடு மட்டுமல்லாமல், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது, அட்டாரி-வாகா எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடியுள்ளது, பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா சேவைகளை ரத்து செய்துள்ளது மற்றும் பாகிஸ்தான் விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடியுள்ளது. மேலும், மத்திய அரசு 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களைத் தடை செய்துள்ளதுடன் , ஹனியா ஆமிர், மஹிரா கான் மற்றும் அலி ஜாபர் போன்ற பாகிஸ்தான் நட்சத்திரங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் முடக்கியுள்ளது. இப்படி அடுக்கடுக்கான நடவடிக்கைகளுக்கு இடையே அடுத்ததாக சர்வதேச நாடுகளிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நிதி உதவியை தடுத்து நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது அந்நாட்டு அரசுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்குள் கால் வைக்காமலேயே கதற விட்ட இந்தியா... உலகையே உலுக்கும் ஒற்றை புகைப்படம்! 

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு உங்களுக்கு கிடைத்த வெற்றியா? திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share